Connect with us

latest news

ரியல் மங்காத்தா ஆடுனது நம்ம வெங்கட் பிரபுதான்… கோட் படத்தின் Honest Review

GoatMovie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.
அப்பா மற்றும் மகன் என இருவரின் மோதலில் யார் ஜெயித்தார் எப்படி ஜெயித்தார் என்பதுதான் படத்தின் கதை. தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே பழைய கதை தான் இது.

இதில் விஜயிற்கு இரண்டு வேடம். இளவயது விஜய்க்கு தான் நிறைய நுணுக்கமான விஎஃப்எக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் எல்லாம் படக்குழு சாதித்து விட்டது. இள வயது விஜயை ஒரு கட்டத்தில் உண்மையான கதாபாத்திரம் என்றே நம்பும் நிலைக்கு மனுஷன் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்க நடிச்சா போதும்… இந்த கிளாமர் ஆசை வேறையா? பிரியா பவானி சங்கர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்

மூன்று மணி நேர படத்தில் இண்டர்வெல் பிளாக்கும், கிளைமாக்ஸ் மட்டுமே அப்ளாஸ் வாங்குகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு திரைக்கதையில் பல இடங்களில் சொதப்பி வைத்து இருக்கிறார். மங்காத்தா போல ஒரு படத்தினை அஜித்துக்கு கொடுத்துட்டு விஜயை இப்படியா ஏமாத்துறது.

மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர், வில்லன் என்ற வேடத்தையே விஜயிற்கு மாட்டிவிட அந்த ஆன்டி ஹீரோ கான்செப்ட்டில் படம் படுத்துவிடுகிறது. ஆனால்,
நாளாக நாளாக விஜய்யின் நடிப்பில் அனுபவம் கூடிக்கொண்டே போகிறது. படத்தின் முக்கிய பிளஸ்சே அவர் மட்டும்தான்.

Goat

எப்பையும் ஆட்டம் தர லோக்கலா இறங்கி ஆடி இருக்காரு. படத்தை இவருக்காக மட்டுமே பார்க்கும் கூட்டத்திற்கு கண்டிப்பாக 3 மணி நேரம் செமையா போகும் என்பதில் சந்தேகமே இல்லை. விஜயைப் போல இப்படத்தில் மற்ற நடிகர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…

ஆனால் இப்படத்திற்கு டாப் ஸ்டார் பிரசாந்தை போட்டு அவர் கேரியரை காலி செய்ய பிளான் செய்தது யாராக இருக்கும். பழைய பஞ்சாங்கமாக இப்படத்திலும் வில்லன் வேடத்தில் மைக் மோகன் நடிக்க வைத்தது தான் படத்தின் முக்கிய மைனஸ். அவர் பார்த்தா பயங்கரமா இருக்கணும் ஆனா பயம் கூட வரமாட்டேங்குது.

ஒரு கட்டத்தில் அவரை சைடு ரோல் பண்றவரு போல இருக்குனு தான் நினைக்க தோணுது. கொஞ்ச நேரமே வந்தாலும் சினேகாவின் ரோல் ரசிக்க வைக்கிறது. ஆனா கேப்ப பில் பண்ற மாதிரி மீனாட்சி சவுத்ரி ரோல் எதுகுப்பா இது? சரி படத்துல தான் இவ்வளவு சோதனை.

பாட்ட வச்சாச்சும் சமாளிக்கலாம் பாத்தா அங்க தான் பெரிய இடி. என்னப்பா யுவன் உனக்கு ஆச்சுனு கேட்கும் நிலைமையா போச்சு. சில இடத்துல பிஜிஎம்மும் சரி, பாட்டும் சரி குறைச்சலா இருக்கு.பல இடத்துல இதைக் கேட்க ரொம்ப எரிச்சலா இருக்கு.

முக்கியமா இந்த படத்துக்கு ஸ்பார்க் பாட்டு தேவையே இல்லாத ஆணி தான்.
படத்திற்கு எல்லாருமே ஓவர்தான். அதிலும், மூணு மணி நேரம் எப்படா முடியும்னு கதவை உடைக்காத குறை. அந்த பாங்காக் காட்சியில் தியேட்டரே குறட்டை சத்தம் கேட்டுச்சினா பார்த்துக்கோங்க. அதெல்லாம் நீக்கி இருந்தால் கொஞ்சம் சமாளித்து இருக்கலாம்.

இதையும் படிங்க: கோபியை தடுத்த ஈஸ்வரி… சிக்கிய ரோகிணி… ஓவரா பேசுறீங்க தங்கமயில்..

இப்படத்தில் ரொம்பவே எதிர்பார்ப்பு விஜயகாந்தின் ஏஐ. ஆனால் அங்கையும் ஏமாற்றம்தான். அதுக்கு செலவு பண்ணதுக்கு பதிலா வெறும் ஒரு போட்டோ வச்சிருந்தாலே சந்தோஷப்பட்டு இருப்போம். அஜித் ரசிகரா ட்வீட்டு போட்டு காலி பண்ணாம ஒரு படத்தை இயக்கியே விஜயை விபி சோலியை முடிச்சிவிட்டாரு.

படத்துல கேமியோ இருக்கலாம். கேமியோவில் தான் இங்க மொத்த படமும் இருக்கு. திரிஷா, சிவகார்த்திகேயன் இப்படி கிடைத்த ஆளெல்லாம் புடிச்சு போட்டு இருக்காரு விபி. விட்டா விஜயை கேமியோவா யூஸ் பண்ணி இருப்பாரு போல.

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்- வேஸ்ஸ்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

google news
Continue Reading

More in latest news

To Top