More
Categories: Cinema News latest news

சூப்பர் ஹிட் படத்தில் விஜயுடன் தொடங்கிய முதல் தகராறு… இயக்குனரை அசிங்கப்படுத்திய எஸ்.ஏ.சி..

SA Chandrasekhar: பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சி கதைகளை இயக்கி தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு பெயரை எடுத்தவர். மற்ற ஹிட் நடிகர்களுக்கே அப்படியென்றால் தன்னுடைய மகனுக்காக அவர் கதையை இயக்கும் போது ரொம்ப கவனம் செலுத்துவார்.

ஆரம்பகாலங்களில் சந்திரசேகர் தான் கதையை கேட்டு ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்குவார். அப்படி தந்தை சொன்ன எல்லாவற்றையும் அச்சு பிசிராமல் செய்வார். இந்த சமயத்தில் விஜயை சிலர் சந்திரசேகர் பழைய மாடலில் இருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜயிற்கு விருப்பமே இல்லாமல் நடித்த படம்… ஒரே நாளில் மாஸ் ஹிட்டாக்கிய எஸ்.ஏ.சி

நீங்களே கதை கேளுங்கள். உங்களுக்கு தான் சமீபத்திய ட்ரெண்ட் செட்டாகும் எனத் தெரியும் என மூட்டி விடுகின்றனர். இதை கேட்ட விஜயும் நானே கதை கேட்டு கொள்கிறேன். நீங்க ஒதுங்கிக்கோங்க எனக் கூறுகிறார். அப்பொழுது தான் ஏழாம் அறிவு படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தினை நெருங்கிய சமயத்தில் முருகதாஸ்  இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார்.

அவரை அழைத்து கதை கேட்டுவிட்டு சம்பளம் விஷயம் பேச தன்னுடைய தந்தையிடம் அனுப்புகிறார். ஆனால் சந்திரசேகருக்கு முருகதாஸ் மீது விருப்பமே இல்லையாம். அவரின் சம்பளத்தினை கேட்டு சிரித்து இருக்கிறார். இதற்கு நான் ஒரு படமே எடுத்து விடுவேன் எனக் குறிப்பிட்டாராம்.

முருகதாஸ் இதனால் ரொம்பவே மனம் வெதும்பி விஜயிடம் இதை கூறி இருக்கிறார். அதில் கடுப்பான விஜய் தந்தையை கண்டித்து இருக்கிறார். துப்பாக்கி படமும் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. முருகதாஸுடன் முட்டிக்கொண்டே இருந்து இருக்கிறார் சந்திரசேகர்.

இதையும் படிங்க: மகனுக்காக பல ஹீரோக்களின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ.சி… அம்புட்டு பாசமோ!

படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜயும், முருகதாஸும் கீழ் அமர்ந்து இருக்க மைக் பிடித்து பேசினார் சந்திரசேகர். அந்த சமயத்தில் முருகதாஸுடன் முட்டிக்கொண்ட எல்லா தருணத்தினையும் போட்டு உடைக்க விஜயிற்கே முகம் சுருங்கியது. இதில் இருந்தே தந்தையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருக்கிறார் விஜய்.

தனியாக முடிவெடுக்க முடியாமல் தந்தையின் கீழ் அவர் சொல்லியதை மட்டும் செய்த விஜய் அந்த துப்பாக்கி பிரச்னையில் இருந்தே தனியாகவே எல்லா கதைகளையும் கேட்டு முடிவெடுக்க தொடங்கினார். தனியாகவே தன்னுடைய கேரியரை முன்னெடுத்து சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan