Jananayagan: விஜய்க்கு இதெல்லாம் தேவையா? இப்படிப் போயி சரண்டர் ஆகிட்டாரே!

vijay
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் தற்போது அவரது கடைசி படமாக சொல்லப்படுகிறது. இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகு முழுநேர அரசியல்வாதியாகிறார் விஜய். இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமை யாருக்கு? டிவி ரைட்ஸ் யாருக்கு? எவ்வளவு விலைக்குப் போயிருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் தேவமணி சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
அரசியல் ரீதியாக திமுகவைத்தான் ஊழல் ஆட்சின்னு சொல்கிறார். எங்களுக்குத் திமுகவைத் தவிர வேறு எதிரி கிடையாது என உரத்தக் குரலில் சொல்கிறார். சில இடங்களில் அதுபோன்ற மூர்க்கத்தனம் இருந்தால்தான் முன்னேற முடியும். அது அரசியலில் இருக்கிறது. அதே நேரம் அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தை சன்டிவியில் 55 கோடிக்கு விற்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
முதலில் 70 கோடி ரூபாய்க்குக் கேட்டார்களாம். ஆனால் அவ்ளோ தொகைக் கொடுத்து வாங்குறதா இல்லை. அதனால் 55 கோடி ரூபாய்க்கு கேட்டார்களாம். தயாரிப்பு தரப்பு விஜயிடம் கேட்க வேண்டும் என்று சொல்லவும், அவரும் கொடுத்துருங்கன்னு சொல்லி விட்டாராம். அதே போல அமேசான் ஓடிடி தளத்தில் 130 கோடிக்கும் விலை பேசி விட்டார்களாம். அரசியலில் மூர்க்கத்தனம் தேவை. அப்போதுதான் முன்னேற முடியும்.
சில இடங்களில் அது தேவை. ஆனால் எல்லா இடங்களிலும் அது இருந்தால் அறிவார்ந்த செயலாக இருக்காது. ஆனால் இப்போது சன்டிவிக்கு அவர் விற்க சம்மதித்ததைப் பார்த்தால், அது அவருக்குப் பின்னடைவைத் தரும். திமுக ஊழல் ஆட்சி. அதை மாற்றத்தான் வந்துருக்கோம்னு சொல்கிறார் விஜய். அந்த வகையில் அரசியலில் நடுநிலையாளர்கள் இப்படி சொல்றாங்க.
நீ பேசுறது எல்லாம் பேசுவ. ஆனா உங்களுக்குள்ளே நீங்க எல்லாம் விட்டுக்கொடுத்து பேரம் 55 கோடின்னு விலை பேசுவீங்க. ஊழல் கட்சின்னு சொல்வீங்க. ஆனா அதுல உள்ள டிவி சேனலுக்குக் கொடுத்து பணவர்த்தனை பண்ணுவீங்க. யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க அப்படிங்கற கேள்வியை மற்ற கட்சிகள் கேட்க வழி இருக்கு. ஆக அரசியல்ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவைத் தரும்னு எல்லாரும் சொல்றாங்க. நானும் அதை வழிமொழிகிறேன் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தேவமணி.