“துணிவுக்கு இவ்வளவு பெரிய கட் அவுட்டா?”… டென்ஷனில் மேனஜருக்கு ஆர்டர் போட்ட விஜய்… என்ன பண்ணார் தெரியுமா??
அஜித் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால் இத்திரைப்படங்களுக்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
துணிவு
அஜித்தின் “துணிவு” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக “துணிவு” திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
வாரிசு
விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷாம், சரத்குமார், சங்கீதா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
“வாரிசு” திரைப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இத்திரைப்படம் தெலுங்கில் “வரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் செவன் ஸ்கிரீன் புரொடக்சன்ஸ் சார்பாக லலித் குமார் வெளியிடுகிறார்.
துணிவு கட் அவுட்
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பரங்கிமலை ஜோதி திரையரங்கில் “துணிவு” திரைப்படத்திற்கு பிரம்மாண்ட பேன்னர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேன்னரை ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற அப்புகைப்படம் தீயாக வைரல் ஆனது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதையும் படிங்க: “விட்டா போதும்டா சாமி”… தாடியால் நிம்மதி இழந்த அஜித்… அடப்பாவமே!!
வாரிசு கட் அவுட்
இந்த நிலையில் “துணிவு” திரைப்படத்திற்கு பிரம்மாண்டமாக பேன்னர் வைத்த செய்தி விஜய்யின் காதுகளுக்கு சென்றதாம். மிகவும் டென்ஷன் ஆன விஜய், உடனே தனது மேனேஜரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. வாரிசு படத்திற்கு துணிவு பேன்னரை விட பெரிய பேன்னர் ஒன்றை சத்யம் திரையரங்கில் வைக்கவேண்டும்” என ஆர்டர் போட்டாராம்.
உடனே சத்யம் திரையரங்கில் “வாரிசு” படத்திற்கு மிகப்பெரிய பேன்னர் ஏறியதாம். “வாரிசு” திரைப்படத்திற்கும் பிரம்மாண்ட பேன்னர் வைக்கப்பட்டுவிட்டதால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.