---Advertisement---

மும்பைக்கு திடீரென பறந்த விஜய்… என்ன காரணம் தெரியுமா?

Published on: March 20, 2026
vijay
---Advertisement---

தமிழ் திரையுலகில் தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என தளபதி விஜய்க்கு ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில், இயக்குனர் அட்லி வீட்டில் நடைபெறும் முக்கியமான சுப நிகழ்ச்சியில் இந்தியாவின் இருபெரும் திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அட்லியின் மனைவி பிரியாவிற்கு மும்பையில் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

அட்லிக்கும் விஜய்க்கும் இடையே உள்ள நட்பு எல்லோரும் அறிந்ததே. மேடைக்கு மேடை விஜய் என் அண்ணன் என்று உரிமையுடன் பேசுவார் அட்லி.

இந்த நிலையில் அட்லி வீட்டு ந்கழ்ச்சிக்காகதான் விஜய் மும்பை சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் இதில் கலந்துகொள்ள உள்ளார். ஜவான் படப்பிடிப்பு சமயத்தில் இருந்தே அட்லிக்கும் ஷாருக்கானுக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யும், ஷாருக்கானும் ஏற்கனவே நல்ல நண்பர்கள். ஷாருக்கான் எப்பொழுதெல்லாம் சென்னை வருவாரோ அப்போதெல்லாம் விஜய்யைச் சந்திப்பது வழக்கம். தற்போது அட்லி வீட்டு விசேஷத்தில் இந்த இருபெரும் நட்சத்திரங்களும் மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.