மூணுல ஒன்னு… கவலையில் பாக்கியா… விஜயாவை பதறவிட்ட முத்து.. ஓவரா பேசாதீங்க பாண்டியன்!..
Vijay TV: பாக்கியலட்சுமி தொடரில் எழில் வீட்டை விட்டு போனதற்கு பாக்கியாவை ஈஸ்வரி திட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர் பாக்கியாவும் என் மகனை நானே போக சொல்லிட்டேன் என அழுது கொண்டிருக்கிறார். செழியன் நான் கால் செய்து கூப்பிடவா என கேட்க வேண்டாம் என மறுத்து விடுகிறார்.
எழில் பெரிய டைரக்டர் ஆனதும் இந்த வீட்டிற்கு வருவான் அதுவரை அமைதியாக இருங்கள் எனக்கு கூறி விடுகிறார். அமிர்தா மற்றும் நிலாவை அழைத்துக் கொண்டு எழில் ஒரு ஹோட்டலில் வந்து தங்குகிறார். நிலா இது யார் வீடு என கேட்க இது ஹோட்டல் என கூறுகிறார் அமிர்தா. பின்னர் எழிலிடம் அமிர்தா மன்னிப்பு கேட்கிறார்.
இதையும் படிங்க: டிமாண்ட்டி காலனி 2 முதல் நாள் வசூல் எவ்வளவு?!.. வாங்க பார்ப்போம்!…
மீனா என்ன செய்யப் போறோம் எனக் கேட்க அம்மா நகையை வாங்கி அடகு வைத்து விடலாம். இல்ல மொத்தமா வித்திடலாம் எனக் கூற விஜயா பதறி எடுத்து ஓடி விடுகிறார். ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் தாங்கள் போட்டியில் தோற்றது குறித்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ரோகிணிக்கு மனோஜ் தாலிச் செயினை வாங்கிக் கொண்டு வருகிறார். இதை பார்த்து விஜயா பெருமைப்பட்டுக் கொள்ள முத்து கலாய்த்து கொண்டிருக்கிறார். விஜயாவிற்கும் புடவை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் மனோஜ்.
இதையும் படிங்க: அடிச்சி தூக்கிய தங்கலான்!.. முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!…
இதை கேட்கும் மீனா சிரித்துக்கொண்டு ரூம் விஷயத்தை நினைத்துக் கொள்கிறார். தங்கமயிலின் அம்மா கால் செய்து நீ ஏன் அவரை மன்னித்தாய். அவர் உன்னை மூணு மணி நேரம் வெளியில் நிற்க வச்சாரு தானே. உன் புருஷனை உன் கையில் போட்டு வச்சுக்கணும் என அவருக்கு தவறாக வழி நடத்துகிறார். இதனுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.