எல்லாத்தையும் கொடுத்துட்டு தெருவுல நிக்கவா?!.. மனுஷனை இப்படி கோபப்பட வச்சிட்டாங்களே..

Published on: April 12, 2024
bala
---Advertisement---

Kpy Bala: பல முன்னனி நடிகர்கள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அதில் குறிப்பிட்ட சில பணத்தைத்தான் சமூக சேவை என்கிற பெயரில் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்களின் பெயர்கள் வெளியே வருவதில்லை. அவர்கள் உதவுகிறார்களா இல்லையா என்றே தெரிவதில்லை. சில நடிகர்கள் தனியே அறக்கட்டளைகளை நிறுவி அதன் மூலம் உதவி வருகிறார்கள்.

ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலாக விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு சாம்பியன் மூலம் அறிமுகமான பாலா தான் சம்பாதிக்கும் அத்தனை பணத்தையும் அவருக்காக வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்காகவே செலவழித்து அதன் மூலம் கிடைக்கிற சந்தோஷத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த இடத்துல பட்டன் இல்லயா செல்லம்!.. ராஷிகண்ணாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்!…

கொரானா காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தலா 1000 ரூபாயை கொடுத்து உதவினார். ஊனமுற்றோர்களுக்கு தேவையாக ஸ்கூட்டர்களை வழங்கினார். ஆம்புலன்ஸ்களை கொடுத்து பல தூரத்தில் இருக்கும் மக்களின் துயரங்களை துடைத்தார். இன்னும் அவரால் முடிந்தளவுக்கு பல உதவிகளை செய்து கொண்டுதான் வருகிறார்.

சமீபத்தில் லாரன்ஸுடன் இணைந்தும் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் பாலாவுடன் ஒரே நேரத்தில் கலக்கப்போவது யாரு சாம்பியனில் அறிமுகமானவர்தான் புகழ். இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இதையும் படிங்க: என் ஆயுள் முழுக்க இந்த வரிகள் கேட்டுக் கொண்டே இருக்கும்! கேப்டன் சொன்ன அந்த பாடல்

அதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் வெள்ளித்திரையில் இப்போது படங்களில் நடித்தும் வருகிறார். அவரிடம் பாலா மாதிரி உதவி செய்வீர்களா? என்று கேட்டதற்கு அதற்கு புகழ் அளித்த பதிலை பாருங்கள். நான் 10 ரூபாய் சம்பாதித்து அதில் ஒரு ரூபாய் கேட்டால் கொடுப்பேன். ஆனால் நான் சம்பாதிக்கிற 10 ரூபாயில் 10 ரூபாயும் கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. ஆனால் இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதான் வருகிறேன் என புகழ் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.