மீனா மீது பாசமாக பேசிய விஜயா… பதட்டத்தில் செழியன்… புலம்பிய கோமதி…
VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் மீனா மருத்துவமனையில் இருக்க அவருக்கு சிகிச்சை நடக்கிறது. வீட்டிற்கு வரும் சத்யாவிடம் சிட்டி மீனாவை அடித்து விட்டதாக கூற அவர் கோபமாக செல்கிறார். மருத்துவமனையில் மீனாவிற்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறி கட்டு மட்டும் போட்டு விடுகின்றனர்.
சத்யா சிட்டியிடம் வந்து எங்க அக்காவை எதுக்கு அடிச்ச என கேட்கிறார். அவங்க என்னை மரியாதை இல்லாம பேசினாங்க என்கிறார். வந்து மன்னிப்பு கேட்க சொல்ல அதற்கு சிட்டி மறுத்து விடுகிறார். இனி என்னை பார்க்காதே என கூறிவிட்டு சத்யா மருத்துவமனை செல்கிறார். மீனாவை பார்த்து இனி சிட்டியுடன் சேரமாட்டேன் எனக் கூற குடும்பமே மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: கோவாவில் பாடகியுடன் மூணு மாசமா இருந்த ஜெயம் ரவி… என்ன காரணம்னு தெரியுதா?
வீட்டிற்கு வரும் முத்து அண்ணாமலையிடம் கீழே விழுந்து விட்டதாக கூற பார்த்து இருக்கலாமே என ஆறுதல் சொல்கிறார். அங்கு வரும் விஜயா மீனாவின் தலையில் இருக்கும் கட்டை பார்த்து காசு சம்பாதிக்கும் போக கூடாது ஒழுங்கா வண்டி ஓட்ட மாட்டியா. நீ சமைக்க வேண்டாம் நானே சமைக்கிறேன் என சொல்லிவிட்டு செல்ல எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா மற்றும் எழில் வீடு பார்த்திருக்க அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பாக்கியா வருகிறார். பால் காய்ச்சி விட்டு எல்லோரும் பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் அமிர்தா இருவரும் வெளியில் செல்கின்றனர். அமிர்தாவின் அம்மா நீங்க இவங்கள வீட்டை விட்டு அனுப்பினதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் என்கிறார்.
அதற்கு பாக்கியா எழிலுக்கு கனவுகள் இருக்கு. அது நடந்தவுடனே அவங்க எங்க வீட்டுக்கு வந்து விடுவாங்க எனக் கூற எழில் கண்கலங்குகிறார். செழியன் பதட்டமாக இருக்க அதற்கு என்னவென்று கேட்கிறார் ஜெனி. என் கம்பெனியில் நிறைய பேரை வேலை விட்டு நிறுத்திவிட்டதாகவும் தனக்கும் அந்த நிலை வந்து விடும் எனக் கூற அதெல்லாம் ஒன்றும் நடக்காது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் ஜெனி.
இதையும் படிங்க: ரஜினி படத்துல ஓபனிங் சாங்… கமல் பாடுவதற்கு வாய்ப்பு?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கதிர் தொடர்ந்து ஓய்வில்லாமல் வேலை செய்வதற்கு ராஜி தான் காரணம் என கோமதி வெகுண்டு எழுகிறார். இதைக் கேட்டு ராஜி கவலை அடைகிறார். ரூமில் சென்று அத்தை பேச்சைக் கேட்டு இந்த கல்யாணத்தை பண்ணிக் கொண்டது தப்பு என வருத்தப்படுகிறார். செந்தில் மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்க நான் ஷாப்பிங் தான் போனேன் என்ற உண்மையை கூறிவிடுகிறார்.
காலையில் தங்கமயில் கோலம் போட்டுக் கொண்டிருக்க ராஜி மற்றும் மீனா அங்கு வருகின்றனர். அப்போது கதிர் வர அவரை பார்த்து ராஜி வருத்தப்படுகிறார். உள்ளே செல்ல கோமதி கதிரிடம் ஆதரவாக பேசுகிறார். ரூமுக்குள் செல்லும் கதிர் ராஜியிடம் பணத்தை கொடுக்க எனக்கு இது வேண்டாம் என கூறிவிடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.