யார் சொன்னது?.. கெத்து காட்ட களமிறங்கிய வாரிசு படக்குழு!.. பாலகிருஷ்ணாவையே மிஞ்சும் விஜய்!..

by Rohini |
vijay_main_cine
X

vijay

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு,பிரபு, சங்கீதா, சம்யுக்தா, யோகிபாபு , சியாம் உட்பட பல நடிகர்கள் வாரிசு படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் ஒரு குடும்ப கதையை மையமாக உருவாகும் கதை என ஆரம்பத்திலேயே படத்தின் இயக்குனர் வம்சி தெரிவித்திருந்தார். 90களில் பார்த்த விஜயை இந்த படத்தில் பார்க்க போகிறீர்கள் என்றும் கூறியிருந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு விஜயை பூவே உனக்காக படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் பார்க்க போகிறோம் என்று ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

vijay1_cine

vijay

இதனிடையில் விஜய் அஜித் படங்களின் போட்டிகள் ஆரம்பமாகின. வாரிசா?துணிவா? என்று கடும் போட்டிகள் நிலவி வரும் நிலையில் இரு படங்களை பற்றிய அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெறியாக்கி கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : டப்பிங் ஆர்ட்டிஸ்ட் காதில் காதலை சொன்ன அஜித்… ஆனா திருமணம் செய்து கொண்டார்… சீக்ரெட் பகிர்ந்த பிரபலம்…

இந்த நிலையில் துணிவு படம் முழு ஆக்‌ஷன் படம் என்று அவரது ரசிகர்கள் வாரிசை படத்தை பற்றி கிண்டல் அடிக்க அதை பார்த்த வாரிசு படக்குழு யார் சொன்னது? வாரிசு படமும் ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாகத்தான் அமைய இருக்கிறது என்று விஜயை வைத்து இன்று சில சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனராம்.

vijay2_cine

vijay

அதற்காக ஜேசிபிகள், லாரிகள் என அளவுக்கதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றனராம். மேலும் இது தமிழ் படம் மட்டுமில்லை ஒரு தெலுங்கு படமும் கூட. ஆகவே சண்டைக் காட்சிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பாலகிருஷ்ணாவின் படங்களை பார்த்தாலே தெரியும் என்ற அளவிற்கு தாறுமாறாக காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கின்றனராம்.

மேலும் இன்றுடன் விஜய் இருக்கிற காட்சிகள் எல்லாம் முடிய இருக்கிறதாம். அது போக பிரகாஷ்ராஜ், சியாம் இவர்கள் கலந்து கொள்ளும் காட்சிகள் இருக்கிறதாம். அதை தான் படமாக்கப் போகிறார்களாம். டிசம்பர் 5ம் தேதி லோகேஷின் தளபதி - 67 படத்தின் பூஜை ஆரம்பமாகிறது. அதற்கான வேலைகளில் விஜய் இனி தயாராகுவார் என்று தெரிகிறது.

vijay3_cine

vijay

Next Story