பொன்னியின் செல்வனை ஓவர் டேக் செய்து சாதனை படைத்த தளபதி விஜய்… தொடங்கியது வாரிசு MODE…

by Arun Prasad |
PS1 and Varisu
X

PS1 and Varisu

மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது.

Ponniyin Selvan

Ponniyin Selvan

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் சாதனையை விஜய்யின் “வாரிசு” திரைப்படம் முறியடித்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் குஷ்பு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சரத்குமார், ஷாம், யோகி பாபு போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

Varisu

Varisu

“வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இதே நாளில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படமும் வெளிவர உள்ளது. பல ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லலித் குமார் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். எனினும் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோவை, நார்த் ஆர்காட், சௌத் ஆர்காட் போன்ற பகுதிகளில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதே போல் அஜித்தின் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

இதையும் படிங்க: ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது லத்தியா? கனெக்ட்டா?

Varisu

Varisu

இந்த நிலையில் விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வெளிநாடுகளில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாம். அதாவது வெளிநாடுகளில் “வாரிசு” படத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து, ஐர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய யுனைட்டட் கிங்டம் பகுதியில் 192 திரையரங்குகளில் “வாரிசு” திரைப்படத்தை திரையிட உள்ளார்களாம். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் 150 திரையரங்குகளில்தான் வெளியானதாம். இந்த நிலையில்தான் “வாரிசு” திரைப்படம் “பொன்னியின் செல்வன்” படத்தை விட அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.

Next Story