தமிழ் செல்லாது...! சர்ச்சையில் சிக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்...!
தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தனது 66வது திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும், ஷியாம், பிரபு, சரத்குமார், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் சமீபத்திய திரைப்படங்கள் போல ஆக்சன் கமர்ஷியல் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தில் விஜய் எந்த மாதிரியான இருக்கிறார் என்பது தற்போது வரை தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலையும் சேர்த்து வெளியிட்டனர். படத்திற்கு வாரிசு என்ற தலைப்பை சூட்டியுள்ளனர் படக்குழு. மேலும் அந்த போஸ்டரில் விஜய் கம்பீரமாக முன்பு இருந்த படங்களில் உள்ள அசால்ட்டான லுக்கில் இருக்கிறார்.
மேலும் தெலுங்கிலும் தெலுங்கு பெயரில் வெளியானது. ஆனால் தமிழ் போஸ்டரில் ஆங்கில எழுத்துக்களில் வெளியானது. இதில் இரண்டாவது போஸ்டரும் ஆங்கில எழுத்துக்களில் தான் வெளியானது. விசாரித்ததில் டிசைனர்ஸ் 3 தமிழ் வடிவமைப்புகளை தயாரிப்பாளரிடம் கொடுத்தனராம். ஆனால் படத்தின் போஸ்டர் வெளியாவதற்குள் அந்த மூன்றுமே பிடிக்காமல் போனதால் ஆங்கில எழுத்துக்களிலயே போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழு.