பேமிலி ஆடியன்ஸ் தலையில் கட்டிடுவாங்களோ?? “வாரிசு” பிழைச்சிக்குமா?? டிரைலர் விமர்சனம்…
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த “வாரிசு” படத்தின் டிரைலர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் குஷ்பு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, சங்கீதா, ஷாம் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
“வாரிசு” திரைப்படத்தின் டிரைலரை வைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் தந்தை சரத்குமாருக்கு பிறகு அவருடைய மூன்றாவது மகனான விஜய் அவரின் தொழிலுக்கு வாரிசாக வருகிறார். தொழிலில் பல போட்டிகள் எழ, எதிரிகளால் பல சதிகள் நடக்கிறது. அந்த சதியால் விஜய்யின் குடும்பம் பிரிய நேர்கிறது. இதனை தொடர்ந்து விஜய் தனது தொழிலுக்கு பங்கம் விளைவிக்கும் எதிரிகளை அழித்தாரா? தனது குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? என்பதுதான் கதையாக இருக்கும் என வியூகிக்க முடிகிறது.
டிரைலரில் விஜய் மிகவும் இளமையாக இருக்கிறார். “விஜய்க்கு வயசே ஆகாதாப்பா” என அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரை மெச்சிப்பேசுவது உண்டு. எனினும் அது உண்மையே என்பது போல் இன்னமும் காலேஜ் ஸ்டூடண்ட் போலவே வலம் வருகிறார் விஜய். டிரைலரில் சில ஆக்சன் காட்சிகள் காட்டப்படுகிறது. அதிலும் தனது அசரவைக்கும் கரிஷ்மா மூலம் ஸ்கோர் செய்கிறார் விஜய்.
ஆனால் இது தவிர, டிரைலர் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகத்தான் தெரிகிறது. டிரைலரை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தெலுங்கு வாடை சற்று அதிகமாக அடிக்கிறது. “வாரிசு” திரைப்படத்தின் இயக்குனர் தெலுங்கு இயக்குனர்தான். மேலும் இத்திரைப்படம் “வாரசுடு” என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது என்பதை ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் டிரைலர் ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தின் டிரைலர் போல் தெரியவே இல்லை.
கதையை பொறுத்தவரை மிகவும் வழக்கமான ஒரு கதைப்போலத்தான் தெரிகிறது. பிரகாஷ் ராஜ் வில்லனாக வருகிறார். அவரின் வில்லத்தனமான மாடுலேசன் நன்றாக இருக்கிறது. ஆனால் வசனங்கள் அந்த அளவுக்கு டெரிஃபிக்காக இல்லை. பிரகாஷ் ராஜ் வசனங்கள் மட்டுமல்லாது, விஜய் பேசும் பஞ்சு வசனங்கள் கூட ஜீவன் இல்லாமல் இருக்கிறது என்பதுதான் சோகம்.
இதையும் படிங்க: சாமிக்கு மாலை போட்டிருந்த இளையராஜாவை கில்மா பாடல் பாட வைத்த பாக்யராஜ்… இப்படி ஏமாத்திட்டாரேப்பா!!
Varisu
“துணிவு” திரைப்படத்தின் டிரைலர் மிகவும் அட்டகாசமாக இருந்ததால், விஜய் ரசிகர்கள் “வாரிசு” திரைப்படத்தன் டிரைலருக்காக வெறிக்கொண்டு காத்திருந்தனர். ஆனால் “வாரிசு” படக்குழுவினரோ ரசிகர்களின் வாயில் பழைய சோத்தை திணித்துவிட்டு போயிருக்கிறார்கள். இனி பொங்கல் தினத்திலாவது பொங்கல் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.