ஐந்து ஸ்டாருக்காக இந்தளவுக்கு கேவலமாக பேச முடியுமா? விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய்

Serial Actor Vishnu: சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு. ஆனால் கொஞ்ச நாளாகவே அவர் சீரியலில் காணவில்லை. அதன் பிறகு பிக்பாஸில் தற்போது நடக்கும் சீசனில் ஒரு வலிமையான போட்டியாளராக காணப்படுகிறார் விஷ்ணு.

ஏழாவது சீசனில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதில் குறிப்பாக விஷ்ணு, அர்ச்சனா இவர்களுக்கிடையில் நடந்த சண்டை மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியது.

இதையும் படிங்க: அஜித்தின் ஆசைக்கு குறுக்கே வந்த சூர்யா!.. தள்ளிப்போன அந்த படம்!. இப்ப எல்லாமே மாறிப்போச்சே!..

ஆனால் இப்போது விஷ்ணு தலைமையில் வீடு இருப்பதால் அர்ச்சனாவுடன் இணக்கமான உறவை ஏற்படுத்தியிருக்கிறார் விஷ்ணு. இன்று நடக்கும் எபிசோடு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப் படுகிறது.

அது சம்பந்தமான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. இன்று நடக்கும் டாஸ்க்கில் யார் வெற்றிப் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஐந்து கோல்ட் ஸ்டார்கள் கிடைக்கும் என பிக்பாஸ் கூறுகிறார். அந்த டாஸ்க்கில் யாருக்கு டாஸ்க் கிடைக்கக் கூடாது என போராடுகிறார்கள்? உங்களுக்கு கிடைக்க எப்படி போராடப்போகிறீர்கள் ? என்பதுதான் அந்த டாஸ்க்.

இதையும் படிங்க: வெற்றிமாறன் இயக்க இருந்த ரியல் ஸ்டோரி.. அட்லீ வசனம் எழுத நான் நடித்திருக்க வேண்டும்.. ஹீரோ சொன்ன சர்ப்ரைஸ்..!

அதில் விஷ்ணு விசித்ராவுக்கு கிடைக்கக் கூடாது என அவரைப் பற்றி சில விசயங்களை கூறுகிறார். அதே வேளையில் விஷ்ணுவுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளராக கருதப்படுபவர் விஜய் வர்மா. அவர் விஷ்ணுவுக்கு அந்த ஸ்டார் கிடைக்கக் கூடாது என போராடுகிறார்.

அப்போது விஷ்ணு இரண்டாம் வாரத்தில் பூர்ணிமாவை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதை விஜய் வர்மா சொல்லும் போது பூர்ணிமா அதிர்ச்சியாகிறார். அதாவது இவளாம் ஒரு ஆளு.. இவ அடுத்த வீட்டுக்கு போய் எப்படி வாழப் போகிறார் என்று விஷ்ணு சொன்னதாக விஜய் அந்த டாஸ்க்கின் போது சொல்கிறார்.

இதையும் படிங்க: தண்ணில்லாம் வத்துன பிறகு boat-அ கொண்டு போய் என்ன செய்ய? சாப்பாடு போட்ட விஜய் இத செஞ்சாரா?

இப்படி ஒரு விளையாட்டிற்காக ஒரு பெண்ணை இந்தளவுக்கு கேவலமாக பேசும் விஜய் இந்த வீட்டில் இருக்க தகுதியில்லாத ஆளு என கூறி அந்த டாஸ்க்கில் போராடுகிறார்.

 

Related Articles

Next Story