அஜீத் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்... ஒன்றரை நாள் கதை சொன்ன இயக்குனர்
1999ல் பார்த்திபன், அஜீத், தேவயாணி, சுவலட்சுமி, விஜயகுமார், ரமேஷ் கண்ணா, வையாபுரி உள்பட பலர் நடித்த நீ வருவாய் என படம் ரிலீஸானது. படத்தை ராஜகுமாரன் இயக்கியுள்ளார். ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்தார்.
பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதிகாலையில், ஒரு தேவதை, பார்த்து பார்த்து, பூங்குயில், ஒரு தேவதை ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நீ வருவாய் என படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் கொண்டாடப்படும் படமாக உள்ளது என்பதால் படத்தைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் படக்குழுவினர். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் படத்தில் நடித்த நடிகர் பார்த்திபனிடம் படம் குறித்த சில விஷயங்களைக் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில்கள் தான் இவை.
Also read: இதுதான் மரியாதை! சூர்யா அளவுக்கு அஜித், விஜய், விக்ரம் இல்லையே.. ஆனா கொண்டாடுறது?
நான் நடிகன்கறதை மீறி பல போர்ஷன்களைப் பார்க்கும்போது அஜீத் வர்ற சீன் ரொம்ப பிடிச்சது. நானும் அந்த மாதிரி கெஸ்ட் ரோல் சில படங்கள்ல பண்ணிருக்கேன். அப்புறம் வசனங்கள். ராஜகுமாரன் கதை சொல்ல ஆரம்பிச்சாலே வசனங்களோட தான் சொல்வாரு. கிட்டத்தட்ட ரூம் போட்டு ஒன்றரை நாள் கழிச்சித் தான் கதையே சொல்லி முடிச்சாரு.
காதலை இப்படி எல்லாம் பார்க்க முடியுமா? காதலை வந்து ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொருத்தரும் பார்ப்பாங்க. அதிலும் ராஜகுமாரனின் காதல் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டது.
கிளைமாக்ஸ் டயலாக் எல்லாம் கொஞ்சம் மாத்தி சொன்னா கூட மாட்டிக்குவோம். மாடுலேஷன் மாறினாலும் அவ்வளவு தான். நீ என்னைக் காதலிக்கணும்கறது முக்கியமல்ல. நான் உன்னைக் காதலிச்சிக்கிட்டே இருப்பேன். அது கிட்டத்தட்ட பைத்தியக்காரத்தனம் தான். காதலே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்.
ஆனால் இது அதை விட பெரிசு. அந்தக் கதை ஒரு வித்தியாசமான களம். 'நான் உன்னைக் காதலிக்கலடா... உன் கண்ணைத் தான் காதலிக்கிறேன்'னு சொல்வாரு. அஜீத் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான் விஜய் நடிக்க ஆசைப்பட்டாராம்.
என்னை வந்து ஹீரோயின் காதலிக்காம இருக்கக் காரணமே அந்த மனுஷன் தான். அப்படின்னா அவர் மேல எனக்கு எவ்வளவு கோபம் வரும்? தேவயாணி காசை வாங்கிட்டு நடிக்கவே மாட்டாங்க. அந்தக் கேரக்டரா இயல்பாவே இருந்துடுவாங்க. அதனால காசு கொடுத்தது எல்லாம் வேஸ்ட் மாதிரி ஆகிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.