மாநாடு படத்தில் நடிக்க வேண்டியது அவரா?...நம்பவே முடியலயே!...
சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்த மாநாடு திரைப்படம் ஒருவழியாக நேற்று காலை வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முதன் முறையாக தமிழில் ஒரு டைம் லூப் திரைப்படம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார்.
இப்படம் சிறப்பாக இருப்பதாக சிம்பு ரசிகர்களுடம், யுடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்யும் நபர்களும் கூறி வருகின்றனர். ஒருபக்கம் முதல் பாதி சரியில்லை. டைம் லூப் கான்செப்ட் பலருக்கும் புரியவில்லை. மு
தல் பாதியில் ஏற்கனவே வந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்பட்டது. ஆனாலும், படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் 6.37 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த கதையை விஜயிடம் வெங்கட்பிரபு சிலவருடங்களுக்கு முன்பே கூறியுள்ளார். கதை பிடித்துப்போக அவர் கண்டிப்பாக நடிக்கிறேன் எனவும் கூறியிருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த பிராஜக்ட் டேக் ஆப் ஆகவில்லை. இல்லையெனில், விஜய் நடிப்பில்தான் மாநாடு வெளியாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.