காசுக்கு விலை போனாரா விஜய்?.. ‘வாரிசு’ படம் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்!..
தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் 11ஆம் தேதி வெளியான படம் வாரிசு. இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், மற்றும் பல நடிகர்கள் நடித்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குடும்ப கதையை அடிப்படையாக வைத்து வாரிசு படத்தை எடுத்துள்ளனர்.
ஒரு நீண்ட நாள்களுக்கு பிறகு விஜய் குடும்ப பின்னனியில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் முதல் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்க துவைத்த துணியை மீண்டும் மீண்டும் துவைத்து காயப்போட்ட மாதிரி தமிழ் சினிமாவில் இதுவரை வந்த அதே கதை பின்னனியில் தான் வாரிசு படம் உருவாகியிருக்கிறது.
ஆர்வமாக போன ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே. மேலும் கதை பழசு என்றாலும் ஏதாவது டிவிஸ்ட் வைத்திருந்தாலும் படம் ஓரளவு ரீச் ஆகியிருக்கும். ஆனால் சொல்லும் படியாக புதியதாக படத்தில் இல்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த கதையின் விமர்சனத்தை ஏற்கெனவே அறிந்தவர் மாதிரி படத்தில் விஜய் அவரே நக்கல் செய்து கலாய்த்து தள்ளியிருக்கிறார்.
இதையும் படிங்க : கேப்டன் யாருக்குத்தான் உதவல!.. நடிகர் ஷாமை மிரட்டியவர்களை பந்தாடிய விஜயகாந்த்!..
அது ஒன்று தான் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தருகிறது. இதை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும் போது எப்படித்தான் விஜய் இந்த கதையை ஒகே செய்தார் என்று தெரியவில்லை. மேலும் வம்சி கதை சொல்லும் போதே 5 கதைகளை கொண்டு சென்றாராம், ஆனால் விஜய்க்கு இந்த கதைதான் பிடித்திருந்ததாம்.
இருந்தாலும் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்த விஜய் இந்த கதையில் எதை பார்த்து ஈர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஒரு வேளை வம்சி அதிகமாக சம்பளம் கொடுக்கிறேன் என்று சொன்னதும் விழுந்தாரா என்று தெரியவில்லை. அல்லது பொங்கலுக்கு சோலாவாகத்தானே களமிறங்க போகிறோம், கதை என்ன கதை என்று மெத்தனமாக இருந்தாரா என்று தெரியவில்லை.
துணிவு படம் தூக்கி சாப்பிட்டு விட்டது, துணிவிலும் அந்த அளவுக்கு கதை ஒன்றும் இல்லை. ஆனால் வாரிசு படம் அரைச்ச மாவையே அரைத்திருப்பதால் துணிவு எவ்ளவோ மேல் என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.