சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படம்...! விஜயுடன் சேர்ந்து நடிக்க போகும் அந்த பிரபலம்...! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..
தமிழ் சினிமாவிற்கு ஏராளமான திறமையான இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பெருமை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கே சேரும். கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் இப்படி பல திறமையான இயக்குனர்களை கொடுத்து தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளது. கிட்டத்தட்ட அந்த நிறுவனத்தின் மூலம் 90க்கும் அதிகமான படங்கள் வெளிவந்துள்ளன.
அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி. சௌத்ரி. இவருடன் சேர்ந்து அவரது மகனும் நடிகருமான ஜீவாவும் அதன் வேலைகளை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 100 வது படம் விஜயின் படமாக இருக்க வேண்டும் என சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 2 வருடங்களாக பேசி வருகின்றனர்.
இதையும் படிங்கள் : பல் பிடுங்கிய பாம்பு என நம்பி ஏமாந்த ரஜினிகாந்த்.. இயக்குனர் பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்…
அதற்கு விஜய் சம்மாதிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ஒரு விழாவில் பேசிய நடிகர் ஜீவா அதை உறுதிபடுத்தியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்புதான் விஜய் சாரிடம் போய் பேசினோம். அவரும் சரி என்று சொல்லியிருக்கிறார். 100 சதவீதம் எங்க 100 வது படம் விஜய் சாருடன் தான் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
இதையும் படிங்கள் : ஒரே ஆண்டில் 5 வெள்ளி விழாப் படங்களைத் தந்த உலகநாயகன் கமல்…! குவிந்தது ரசிகர் வட்டாரம்…!!!
மேலும் அந்த படத்தில் அவருடன் நானும் சேர்ந்து நடிப்பேன் என்று என் அப்பாவிடம் கூறியிருக்கிறேன். சம்பளம் எதும் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன் என மேடையில் ஜாலியாக பேசினார் நடிகர் ஜீவா.