தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கா? அதுதான் அவரோட பிளானா?

vjy
சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகப்போவதாக அறிவித்தார் விஜய். தனது கடைசி படமாக 69வது படம் இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி கட்சிக்கான கொடியையும் தளபதி விஜய் அறிமுகப்படுத்தி விட்டார். கட்சிக்கான கொள்கைப்பாடலையும் அதே நாளில் வெளியிட்டார்.
200 கோடி வரை சம்பளம் பெறும் உச்சநட்சத்திரமாக தமிழ்த்திரை உலகில் ஜொலித்து வருகிறார். அப்படி இருக்கும்போது அரசியலில் முழுமூச்சாக இறங்குவதாகவும், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தது பல அதிர்வலைகளை உண்டாக்கியது.
Also read: கோலிவுட்டின் மாஸ் ஹிட் படங்கள்… விஜய் நோ சொன்ன பெத்த லிஸ்ட்.. மிஸ் பண்ணிட்டீங்களே தளபதி…
இந்த நிலையில் அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படமாக கோட் என்ற படத்தில் நடித்துள்ளார். இது வரும் செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்காக ஆடியோ லாஞ்ச் வேண்டாம் என்றும் அறிவித்து விட்டார்.
அடுத்து செப்டம்பர் மாதம் தனது கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் ஆடியோ லாஞ்ச் தனக்கு சவுகரியமாக இருக்காது என்றும் கருதினார். இவரது 69வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். அது அடுத்த ஏப்ரலுக்குள் முடிவடைந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது.

GOAT
அதன்பிறகு இருக்கும் ஒரு ஆண்டு இடைவெளியில் அரசியலில் முழுமூச்சாக களமிறங்கி சட்டசபைத் தேர்தலுக்கான களப்பணிகளில் ஈடுபடுவார் என்றும் தெரிகிறது. இப்போது அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. விஜய் ஒருவேளை அரசியல் செட்டாகலைன்னா மீண்டும் நடிக்க வருவாரா என்பது தான் அந்தக் கேள்வி.
அந்த சாயலில் இப்போது ஒரு கேள்வி யூடியூப் சேனல் ஒன்றில் கேட்கப்பட்டது. அது என்னன்னு பார்க்கலாமா...
வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் எதிர்க்கட்சி தலைவரானால் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவாரான்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டார். அதற்கு எந்தத் தடையும் சட்டத்தில் கிடையாது.
ஆனால் விஜய் தான் அதைப் பற்றி அந்தக் காலகட்டத்திலே முடிவு எடுக்க வேண்டும் என பதில் அளித்துள்ளார். அப்படி என்றால் விஜய் அடுத்து தேர்தலுக்குப் பிறகு அரசியலிலும், சினிமாவிலும் அதிரடி காட்டக்கூடும் என்றே தெரிகிறது.