‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ மிஸ் ஆகுமா? ரசிகர்களை சந்திக்கும் விஜய் - அதான இது இல்லாம லியோ படமா?

by Rohini |
vijay
X

vijay

Leo Pre Release Event: விஜய் நடிப்பில் நேற்று பெரும் கலவரத்திற்கும் இடையில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்தில் 10மில்லியன் வியூவ்ஸ்களை கடந்து சாதனை படைத்தது. படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ படம் முழுக்க ரத்தம் தெறிக்கப் போகிறது என்பது மட்டும் புரிகிறது.

அந்தளவுக்கு படமுழுக்க வைலன்ஸை லோடு செய்து வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனாலும் படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது விஜயின் நடிப்பு கொஞ்சம் மெர்சலாகத்தான் இருக்கும் போல என தெரிகிறது.

இதையும் படிங்க: ஜவானுக்கே 10 தானாம்.. ஆனா லியோவுக்கு 30 ஆ? ஜெய்லர் வசூல் எல்லாம் ஜுஜுப்பி… ஆட்டம் பயங்கரமால இருக்கு…!

ஷார்ட்டுக்கு ஷார்ட் விஜயின் ஆக்ரோஷமான நடிப்பை பார்க்க முடிகின்றது. விஜயை மட்டுமில்லாமல் படத்தில் நடித்த முக்கிய பிரபலங்களுக்கு சமமான இடத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் என்றே தெரிகிறது.

மேலும் படத்தில் தகாத வார்த்தையை பேசியிருக்கும் விஜய்க்கு எதிராக பெண்கள் நல அமைப்பு சார்பாக சில கண்டனங்களையும் எழுப்பியிருக்கின்றனர். இது ஒரு விதத்தில் விஜயின் அரசியலுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து 100 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள்!.. தியேட்டரில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்….

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து விஜயை நேரில் பார்க்க மாட்டோமா என்று ரசிகர்கள் தவம் கிடந்து காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை குஷிப் படுத்தும் வகையில் விஜய் என்ன பேச நினைத்தாரோ அதை பேசி வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர இருக்கிறாராம்.அதுமட்டுமில்லாமல் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டையும் நடத்துவதாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் ஒதுங்கிய அஜித் ஃபேன்ஸ்! ஒரே நாளில் லியோ படத்தின் சாதனை… தெறிக்க..!

வரும் 12ஆம் தேதி அந்த ஈவண்ட் துபாயில் நடத்த இருக்கிறார்களாம். ஆனால் அதில் விஜய் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக அனிருத், இயக்குனர், தயாரிப்பாளர் என இவர்கள்தான் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Next Story