இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் விஜய் 67... லோகேஷுடன் கதை இல்லையா...
விஜய் 67 படத்தின் மைய கதை ஹாலிவுட் படத்தின் காப்பி தான் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் மாஸ்ஹிட் நாயகனான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமிழில் உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தினை தில் ராஜு இயக்குகிறார். விஜயின் ஹிட் படங்களின் வரிசையில் வாரிசும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பீஸ்ட் படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தின் மீது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் 67 வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வருகிறார். இதே கூட்டணியில் தான் மாஸ்டர் படம் வெளியாகியது. நல்ல வசூலை பெற்ற இப்படம் விஜயின் கேரியரில் வேறு பாதையை உருவாக்கியது. இப்படத்தின் பவானியாக விஜய் சேதுபதி செய்த வில்லத்தனத்திற்கே படத்தினை தொடர்ச்சியாக பலரும் பார்த்தனர்.
தற்போது, மாஸ்டருக்கு அடுத்து தளபதி67ல் இக்கூட்டணி அமையும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சின் ஒரு அங்கமாக இருக்கும் என்றும், விக்ரமாக கமல் இதில் நடிக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், இப்படத்தின் கதை ஹாலிவுட் மாஸ் ஹிட் படமான ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வயலன்ஸ் கதை மையமாக வைத்து தான் உருவாக இருக்கிறதாம். 2005 ஆம் ஆண்டு டேவிட் க்ரோனன்பெர்க் இயக்கத்தில் வெளியான இப்படத்தினை ஜோஷ் ஓல்சன் எழுதியிருக்கிறார்.
ஜான் வாக்னர் மற்றும் வின்ஸ் லாக் ஆகியோரால் 1997ல் இதே தலைப்பில் எழுதப்பட்ட கிராஃபிக் நாவலின் தழுவல் தான். அதனால் இந்த கதையின் ரைட்ஸை லோகேஷ் வாங்கி விஜயிற்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: வாரிசு முதல் சிங்கிளை விஜய் பாடினார்… இரண்டாவது சிங்கிள் இந்த டாப் ஸ்டார் பாடியிருக்கிறாராம்…
முதற்கட்ட பணிகள் நடிந்து வரும் இப்படத்தின் மற்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விஜய் மீண்டும் இப்படத்தில் நடிப்பார் என அறியப்படுகிறது.