விஜயகாந்த் பற்றி மும்பை கார் டிரைவர் சொன்ன விஷயம்!.. அதிர்ந்து போன விஜய பிரபாகரன்..

Published on: March 11, 2024
vijayakanth
---Advertisement---

கேப்டன் விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். எல்லோரும் வயிறார சாப்பிட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர். யாருக்கேணும் ஏதும் பிரச்சனை எனில் உடனே வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிடுவார்.

எல்லோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதில் அதிக முனைப்பும், ஆர்வமும் உள்ளவர். அதனால்தான் பலருக்கும் அவரை பி்டித்திருந்தது. அதனால்தான் அவரை பற்றி எல்லோரும் பெருமையாக பேசுகிறார்கள். ஏனெனில் நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர் என பலருக்கும் அவர் பல உதவிகளை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: குணா பட குகையை இப்படித்தான் கண்டுபிடிச்சோம்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சந்தானபாரதி…

பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதனால்தான் பலரும் அவரிடம் நன்றி உணர்ச்சியோடு இருந்திருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்தபோது அவருக்காக பொதுமக்கள் பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், அவரின் இறுதி ஊர்வலத்தின் போது தங்களின் வீடுகளில் நின்றவாறு மேலிருந்து பூக்களை அவர் மீது தூவி வழியனுப்பி வைத்தார்கள். மேலும், அவருக்கு தமிழக அரசு அரசு மரியாதை கொடுத்து கவுரவப்படுத்தியது. இந்நிலையில், ஒரு மேடையில் பேசிய விஜயகாந்தின் மூத்தமகன் விஜயபிரபாகரன் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: எனக்கு ஒரு துப்பாக்கி வேணும்!.. ஆசையாக கேட்ட விஜயகாந்த்!… ராவுத்தர் அடித்த கமெண்ட்!..

ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது வாடகை காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த டிரைவர் ‘என் காரில் பல தமிழ் நடிகர்கள் ஏறி இருக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும்தான் 2 ஆயிரம் பணம் கொடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டு போ’ என சொன்னார். அவர் பார்ப்பதற்கு உங்களை போலவே இருந்தார்.

அவரின் பெயர் கூட காந்த் என முடியும் என்றார். நான் ‘ரஜினிகாந்தா?’ எனக் கேட்டேன். ‘இல்லை இல்லை’ என்றார். ‘விஜயகாந்தா?’ எனக்கேட்டேன். ‘எஸ்…எஸ்.. விஜயகாந்த்.. அவர் ஒரு நல்ல மனிதர். இரண்டாயிரம் கையில் கொடுத்து சாப்பிட்டு போ என சொன்ன ஒரே தமிழ் நடிகர் அவர்தான்’ என சொன்னார்’ என விஜய பிரபகாரன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: கமல், ரஜினியின் மாஸ் படங்களையே பின்னுக்குத் தள்ளிய விஜயகாந்த் படம்!.. கெத்து காட்டிய கேப்டன்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.