Connect with us
3 Actors

Cinema History

கமல், ரஜினியின் மாஸ் படங்களையே பின்னுக்குத் தள்ளிய விஜயகாந்த் படம்!.. கெத்து காட்டிய கேப்டன்!..

1987ல் நாயகன், உழவன் மகன், மனிதன் என 3 பிரம்மாண்டமான படங்கள் வெளியானது. இவற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்றது எது என்று பார்ப்போமா…

கேப்டன் விஜயகாந்த் நடித்த உழவன் மகன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மனோஜ் கியான் இசை அமைத்துள்ளார். அரவிந்த்ராஜ் இயக்கினார். ராதிகா, நம்பியார், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது விஜயகாந்தின் சொந்தப் படம்.

இதுல அவருக்கு இரட்டை வேடம். ஒருவர் விவசாயி. ஒருவர் நகரத்துல உள்ளவர். இதுல சிறுவயதிலேயே ஒருவர் தொலைந்து விடுவார். அப்பா நம்பியார். ராதாரவி நம்பியாரைக் கொலை செய்துவிட்டு பழியை கேப்டன் மேல சுமத்துவார்.

இந்தப் படத்தில் வரும் ரேக்ளா ரேஸ் ஹைலைட். ராதா, ராதிகா இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். தெலுங்கிலும் வசூலை அள்ளியது. பாடல்கள் எல்லாமே ஹிட். எம்ஜிஆரே படத்தைப் பாராட்டியுள்ளார். விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

3 in 1

3 in 1

மனிதன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லிகணேஷ், சோ, வினுசக்கரவர்த்தி என பலர் நடித்துள்ளனர். அமாவாசைல பிறந்ததால ரஜினி திருடன்னு சொல்லி எல்லாரும் வெறுப்பேற்றுவாங்க.

அதனால வீட்டை விட்டு வெளியே போயிடுவாரு. ஸ்ரீவித்யா தம்பியைத் தேடி வர்றாரு. ரஜினி ஜெயில்ல இருந்து வெளியே வர்றாரு. காளை காளை முரட்டுக்காளைங்கற பாடலுக்கு ரூபினியுடன் ரஜினி போடும் ஆட்டம் செம மாஸ்.

மனிதன் மனிதன் பாடலும் சூப்பர். வானத்தைப் பார்த்தேன்னு ஒரு தத்துவப் பாடல். பைட், காமெடி, சென்டிமென்ட்னு ரஜினி தூள் கிளப்புகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். ரகுவரனின் நடிப்பு மாஸாக இருக்கும்.

நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த மாஸ் படம். கதை பாம்பேயை மையமாக வைத்து உருவானது. ஆனால் செட் போட்டது எல்லாம் சென்னையில் தான். கமல், சரண்யா, ஜனகராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏழைகளுக்கு நன்மை செய்யும் ஒரு டானின் கதை.

கமல் படத்தில் வேலுநாயக்கராகவே வாழ்ந்து இருக்கிறார். சிறுவயது முதல் முதியவர் வரை இவர் காட்சிக்குக் காட்சி நடிப்பில் ஜொலித்து இருப்பார். அந்தி மழை மேகம், நான் சிரித்தால் தீபாவளி, நிலா அது வானத்து மேலேன்னு பாடல்கள் எல்லாமே சூப்பர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.

நாயகன், மனிதன் படங்கள் நல்ல வசூலைக் கொடுத்தாலும், உழவன் மகன் ஒரு படி மேலாகப் போய் பெரும் வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல கலெக்ஷனை அள்ளியது. கிராமப்புறங்களில் ரொம்பவே ஹிட் அடித்தது உழவன் மகன் தான்.

சமீபத்தில் இயக்குனர் அரவிந்தராஜே ஒரு பேட்டியில் இவ்வாறு சொன்னாராம். நாயகன், மனிதன் படங்கள் வெற்றி பெற்றாலும், உழவன் மகன் தான் நல்ல கலெக்ஷன். எல்லாமே நாலு காட்சிகள். மற்ற படங்கள் ஒரு காட்சியை வைத்தே நிறைய நாள்களை ஓட்டினார்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top