இந்த நிலைமையிலும் விஜயகாந்த் பார்க்க ஆசைப்பட்ட நடிகர்! அவர பாத்து என்ன கேட்டாரு தெரியுமா?

Published on: June 9, 2023
viji
---Advertisement---

தமிழ் திரையுலகில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கொடைவள்ளலில் இவர் தான் சிறந்தவர் என போற்றத்தக்க நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். எந்த நேரமும் விஜயகாந்த் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும் என்று பல பிரபலங்கள் பேட்டிகளில் சொல்லி கேட்டிருப்போம் .அதற்கு காரணம் யார் எப்ப போனாலும் அவர்களை வயிறார சாப்பிட வைத்து அனுப்பக்கூடிய ஒரு வள்ளலாகவே இருந்திருக்கிறார் விஜயகாந்த்.

viji1
viji1

நிஜ ஹீரோ

சினிமாவில் மட்டும் அவர் ஹீரோவாக இல்லை நிஜத்திலும் ஹீரோவாகவே அனைவருக்கும் இருந்திருக்கிறார். இப்பொழுது அவர் இருந்தும் இல்லாமல் போல் இருப்பது அனைவருக்கும் ஒரு பெரிய வருந்தத்தக்க விஷயமாகவே இருக்கிறது.

அரசியலிலும் தன் ஆளுமையை நிரூபித்த விஜயகாந்த் ஏதோ போதாத காலம் அவரை இந்த அளவுக்கு படுக்கையில் விட்டு விட்டது. இல்லையென்றால் இன்று சினிமாவையும் சரி தமிழகத்தையும் சரி ஒரு ஆளும் மனிதராக இருந்திருப்பார் விஜயகாந்த். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்தை அவ்வப்போது திரையுலகை சார்ந்த பலரும் சந்தித்து வருகின்றனர்.

viji2
viji2

விஜயகாந்த் அழைத்த அந்த நடிகர்

ஆனால் விஜயகாந்தே இந்த நிலைமையிலும் ஒரு நடிகரை பார்க்க வேண்டும் என கூறினாராம். அவர்தான் பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன். இதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறிய பாவா லட்சுமணன்” என்னை விஜயகாந்த் பார்க்க வேண்டும் என கூறினார் .அதனால் அவர் வீட்டுக்குச் சென்று அவரை நான் பார்த்தேன் .என்னை நலம் விசாரித்து சவுத்ரி நல்லா இருக்கிறாரா ?ஆபாவாணன் நல்லா இருக்கிறாரா?” என சில தயாரிப்பாளர்களின் பெயர்களை கூறி அவர்களையும் நலம் விசாரித்தாராம் விஜயகாந்த்.

vadi3
bava

மேலும் விஜயகாந்தை பற்றி கூறிய பாவா லட்சுமணன் “தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக வயிறார சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். ஆனால் ரஜினி .கமல். விஜய். அஜித் இவர்கள் யாரும் அதை இன்றளவும் செய்யவில்லை” என்றும் கூறினார்.

இதையும் படிங்க : பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த ஆர்யா.. பாடம் புகட்ட அஜித் பட இயக்குனர் செய்த வேலை!..