Connect with us

Cinema News

ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கிய விஜயகாந்த்.. கொந்தளித்த ராவுத்தர்…

விஜயகாந்தும் மறைந்த தயாரிப்பாளர் இப்ரஹிம் ராவுத்தரும் சிறந்த நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்ரஹிம் ராவுத்தர் விஜயகாந்த்தை கதாநாயகனாக வைத்து “கேப்டன் பிரபாகரன்”, “புலன் விசாரணை” என பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார்.

இதனிடையே கடந்த 1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தை வைத்து “முரட்டு காளை” திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்தது. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விஜயகாந்த்தை அணுகி இருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.

விஜய்காந்தும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஏற்றுக்கொண்டார். அதன் பின் 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் பெற்றுள்ளார். இந்த விஷயத்தை தனது நண்பரும் தயாரிப்பாளருமான ராவுத்தரிடம் கூறியிருக்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்த் கூறியதை கேட்டு கோபப்பட்ட ராவுத்தர் “யாரை கேட்டு நீ வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டாய். உன்னை நான் எவ்வளவு பெரிய கதாநாயகனாக ஆக்க ஆசைப்பட்டுள்ளேன் ஆனால் நீ வில்லனாக நடிப்பதற்கு அட்வான்ஸை வாங்கி வந்துள்ளாய்” என கூறி விஜயகாந்த் வாங்கிய அட்வான்ஸை மீண்டும் ஏவிஎம் நிறுவனத்திடமே திரும்பக்கொடுத்துள்ளார்.

அதன் பின் தான் விஜயகாந்த்தை வைத்து பல திரைப்படங்களை இப்ரஹிம் ராவுத்தர் தனது ராவுத்தர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்க தொடங்கினார். “உழவன் மகன்”, “பூந்தோட்ட காவல்காரன்”, “பாட்டுக்கொரு ஒரு தலைவன்”, “என் ஆசை மச்சான்”, “காந்தி பிறந்த மண்” என பல திரைப்படங்களை தயாரித்தார். இவ்வாறு விஜயகாந்தின் வளர்ச்சியில் உறுதுணையாக திகழ்ந்த ராவுத்தர் கடந்த 2015 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top