ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜயகாந்த்... அட இது தெரியாம போச்சே!...
திரையுலகில் ரஜினி, கமல் கோலோச்சிய காலத்தில் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஜயகாந்த். சில சமயங்களில் ரஜினி படம் வெளியான போது வெளியாகும் விஜயகாந்த் படங்கள் ரஜினி படத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பொதுவாக கமல், ரஜினி ரசிகர்களுக்கு விஜயகாந்தை பிடிக்காது. அதேபோல், விஜயகாந்த் ரசிகர்களுக்கு ரஜினி,கமல் இருவரையும் பிடிக்காது. ஆனால், நிஜ வாழ்வில் அவர்கள் நண்பர்களாகவே இருந்துள்ளனர். ரஜினிக்கு விஜயகாந்த் மீது நல்ல அன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. ரஜினியை விஜயகாந்த் ‘அண்ணன்’ என்றுதான் அழைப்பார். ரஜினியோ விஜயகாந்த ‘விஜி’ என செல்லமாக அழைப்பார். விஜயகாந்த் நடிக்கும் படங்களை பார்த்துவிட்டு அவருக்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் கூறுவார் ரஜினி.
கமலுடன் மணக்கணக்கு என்கிற படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். ஆனால், ரஜினியுடன் நடிக்கவில்லை. ஆனால், ஒரு படத்தில் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. 1978ம் ஆண்டு உருவான ‘என் கேள்விக்கென்ன பதில்’ என்கிற படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்க விஜயகாந்துக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஐந்து நாட்கள் அப்படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்தும் கலந்துகொண்டு நடித்துள்ளார். ஆனால், அவரின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என காரணம் கூறி அவரை அப்படத்திலிருந்து நீக்கிவிட்டு விஜயகுமாரை நடிக்க வைத்துள்ளனர். இப்படி சில அவமானங்களை சந்தித்தாலும் போராடி ஹீரோவாக மாறி பல வெற்றிப்படங்களை கொடுத்தார் விஜயகாந்த்.
ரஜினி படத்தில் இருந்து நீக்கப்பட்ட விஜயகாந்த், ரஜினி படங்களோடு போட்டி போடும் படங்களை கொடுத்த நடிகராக மாறியதுதான் சினிமா வரலாறு..
இதையும் படிங்க: அர்ஜூன் வாழ்க்கையில் அவருக்கே தெரியாமல் ஒளி ஏற்றி வைத்த விஜயகாந்த்… ஓஹோ இப்படி எல்லாம் நடந்துருக்கா?