விஜயகாந்தே பார்த்துப் பயந்த ஆள்...! அஞ்சாத சிங்கமா இப்படி இருந்தாரு?

by sankaran v |
vijayakanth
X

vijayakanth

தமிழ்த்திரை உலகில் யாருக்கும் அஞ்சாத சிங்கமாக நிமிர்ந்த நெஞ்சுடன் வாழ்ந்து மறைந்தும் நம்மை விட்டு நினைவுகளில் இருந்து அகலாதவர் கேப்டன் விஜயகாந்த். இவருக்கும், அவரது தோழர் இப்ராகிம் ராவுத்தருக்குமான நட்பு எப்படிப்பட்டதுன்னு பார்க்கலாமா…

இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் இணைபிரியாத நண்பர்கள். அவர்களது நட்பு ரொம்ப பரிசுத்தமானது. அந்த வகையில் விஜயகாந்த் ராவுத்தர் என்ன சொன்னாலும் கேட்பாராம். அவரும் விஜயகாந்துக்காகவே அவரது வளர்ச்சிக்காகவே எப்போதும் சிந்தித்தபடி பல வேலைகளை அவருக்காக செய்து வந்துள்ளார். ஒரு படம் கமிட் பண்ண வேண்டும் என்றால் அந்தக் கதையை ராவுத்தர்தான் கேட்பாராம்.

அவருக்குப் பிடித்து இருந்தால் அதை விஜயகாந்திடம் கேட்காமலேயே ஓகே சொல்லி விடுவாராம். அதன்பிறகு 'விஜி அந்தக் கதையை ஓகே பண்ணிட்டேன். நீயும் கேட்டுக்க'ன்னு சொல்வாராம். விஜயகாந்தும் அதற்கு சரி என்று சம்மதித்து விடுவாராம். விஜயகாந்தை எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்க விட மாட்டாராம். அது சரி என்றால் மட்டும் ஒத்துக் கொள்வாராம்.

அதே நேரம் விஜயகாந்தும் அவரின் அனுமதி இல்லாமல் எதையும் செய்ய மாட்டாராம். ஒரு படத்தில் தனக்கு ஒரு புதுமுக நடிகையை நடிக்க வைத்தால் நல்லாருக்குமேன்னு நினைத்து அந்த எண்ணத்தை ராவுத்தரிடம் கேட்காமல் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார் விஜயகாந்த். அதற்கு ராவுத்தரிடம் தயாரிப்பாளர் சொல்ல 'அவன் கிடக்குறான்… படம் விஜயகாந்துக்காகத் தான் ஓடுது.

கூட நடிக்கிற நடிகைக்காக அல்ல. விஜயகாந்துக்கு ஏற்ற மாதிரி பாட்டு, பைட் வச்சிருவோம். நான் விஜயகாந்துக்கிட்ட பேசிக்கிறேன். நீங்க எப்பவும் போல ஹீரோயினைப் போடுங்க'ன்னு சொல்லி விடுகிறார். அதைக் கேட்கும் விஜயகாந்தும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் 'ராவுத்தர் சொன்னா ஓகேதான்' என்று இருந்து விடுகிறார். தயாரிப்பு தரப்புக்கு எந்த நட்டமும் வராதபடி விஜயகாந்த் நடந்து கொள்வார்.

படமும் கணிசமான லாபத்தைத் தருவதாகவே இருக்கும். நட்டம் வந்தால் கூட தன் கையில் இருந்து பணத்தைக் கொடுப்பார் அல்லது அடுத்த படத்தை சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்து விடுவார். அந்த வகையில் சிங்கம் மாதிரி திரையுலகில் பவனி வந்த விஜயகாந்தை கேப்டன்னு சொல்வாங்க.

ஆனா அவரே பயந்த ஒரே ஆள்னா அது இப்ராகிம் ராவுத்தர் தானாம். உழவன் மகன், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணைன்னு எல்லா படங்களுக்குமே ஸ்ட்ரக்சர் முடிவு பண்றது ராவுத்தர் தானாம். 'கதையை கேளு உனக்குப் பிடிச்சா எடுப்போம்'னு சொல்ல மாட்டாராம். 'கதையை கேளு. பண்ணிடலாம்'னு தான் சொல்வாராம். மேற்கண்ட தகவல்களை பிரபல தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.

Next Story