வடிவேலுக்கு வாய்ப்பு மட்டுமில்ல!..துணி வாங்கி கொடுத்ததும் கேப்டன்தான்...பிரபல நடிகர் பேட்டி...

by சிவா |   ( Updated:2022-08-25 03:28:30  )
vijayakanth
X

தமிழ் சினிமா உலகில் பலருக்கும் பல உதவிகளை செய்தவர் நடிகர் விஜயகாந்த். திரையுலகில் பல புதிய நடிகர்களை, தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளார். மன்சூர் அலிகான், சரத்குமார் உள்ளிட்ட பலரையும் தூக்கிவிட்டவர் விஜயகாந்த். இதை அவர்களே பல பேட்டிகளில் கூறியுள்ளனர்.

vijayakanth

நடிகர் வடிவேலுவை அறிமுகம் செய்தவர் ராஜ்கிரண் என்றாலும் அவருக்கு சில வாய்ப்புகளை கொடுத்து தூக்கிவிட்டவர் விஜயகாந்த் என்பது பலருக்கும் தெரியாது. ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றார் வடிவேல். ஆனால், அவரை நடிக்க வைக்க வேண்டாம் என கவுண்டமணி கூறிவிட்டார்.

vijayakanth

இதை வடிவேல் விஜயகாந்திடம் கூற, இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரை அழைத்து இந்த படத்தில் வடிவேலு நடிக்க வேண்டும். படம் முழுக்க எனக்கு அருகில் குடை பிடித்தபடி வருவது போல அவருக்கு வேடம் கொடுங்கள் எனக்கூற, அப்படித்தான் சின்ன கவுண்டர் படத்தில் நடித்தார் வடிவேலு.

மேலும், சரியான உடைகள் இல்லாமல் சிரமப்பட்ட வடிவேலுவுக்கு தன்னுடையை சொந்த செலவில் வேஷ்டி, சட்டைகளை வாங்கி கொடுத்து ஆதரவு கொடுத்தார் விஜயகாந்த. இந்த தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு யுடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

meesai

பின்னாளில் தனக்கு ஆடைகள் வாங்கி கொடுத்த விஜயகாந்துக்கு எதிராகவே வடிவேல் திரும்பி அவரை கடுமையாக விமர்சித்த சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story