Connect with us
viji

Cinema News

விஜயகாந்த் என்னை பார்க்க வராதேனு சொல்லிட்டாரு! கேப்டன் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

Actor Vijayakanth: தமிழ் திரையுலகில் மாபெரும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.  இனிக்கும் இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த் தொடர்ந்து புரட்சிக்கரமான வசனங்களை பேசி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

கேப்டன் , புரட்சிக் கலைஞர் என்ற பெயர் வாங்குவதற்கு முன்பே அவரை தேடி வருவோர்க்கு வயிறார சாப்பாடு போட்டவர். யார் போனாலும் முதலில் விஜயகாந்த் செய்வது அவர்களை சாப்பிட வைப்பதுதான். விருந்தோம்பலை மனதார விரும்பி செய்தவர் கேப்டன்.

இதையும் படிங்க: இந்த புள்ளபூச்சிய சீக்கிரம் மாட்டி விடுங்கடா கடுப்பாகுது… மனோஜால் காண்டாகும் ரசிகர்கள்..!

இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயகாந்தை பற்றி சில சுவாரஸ்யமான சம்பவங்களை கூறினார். எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

அது சம்பந்தமாக பேசும் போது விஜயகாந்தை பற்றியும் கூறினார். எம்.எஸ்.பாஸ்கர் எந்த கார் வாங்கினாலும் முதலில் நேராக விஜயகாந்த் வீட்டிற்கு கொண்டு சென்று அவரை முதலில் உட்கார வைத்து அதன் பிறகு விஜயகாந்த் கையால் சாவியை வாங்கிய பிறகே காரை ஓட்டுவாராம்.

இதையும் படிங்க: ரஜினி தன் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம்!.. அத எப்படி செலவு செய்தார் தெரியுமா?!..

அந்தளவுக்கு விஜயகாந்த் மீது இன்றளவு வரை மிகுந்த பற்று கொண்டவராக பாஸ்கர் இருந்து வருகிறார். ஆரம்பாகாலங்களில் ஏற்பட்ட நட்பு என்றும் அவர் என் அண்ணன் இல்லை. ஒரு அம்மா என்றும் கூறினார். ஆரம்பகாலங்களில் இருவரும் அருகருகே படுத்துக் கொண்ட அனுபவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது என்றும் கூறினார்.

அப்படிப்பட்டவரை இப்பொழுது பார்க்க அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்று மனம் வருந்தி கூறினார்.கிட்டத்தட்ட 6 வருடமாகி விட்டதாம் விஜயகாந்தை பார்த்து. அவர் நல்ல உடல் நிலையில் இருக்கும் போது கட்சி அலுவலகத்திற்கு சென்றாராம் பாஸ்கர்.

இதையும் படிங்க: நடிகைகளுக்கு 50 – 50!.. கணவர் சூர்யா பற்றி ஓபனா சொன்ன ஜோதிகா.. என்ன மேட்டர் தெரியுமா?..

உடனே விஜயகாந்த் இங்கெல்லாம் வரக்கூடாது. பார்க்க வேண்டுமென்றால் வீட்டிற்கு வா. இந்த அரசியல் வாடை, கட்சி இதெல்லாம் உனக்கு ஆகாது. கட்சியிலும் சேர வேண்டும் என்றும் நினைக்காதே என பாஸ்கருக்கு அறிவுரை கூறினாராம் விஜயகாந்த்.

google news
Continue Reading

More in Cinema News

To Top