விஜயகாந்திடம் அடி வாங்கிய ராவுத்தர்!.. ரகசியத்தை பகிர்ந்த காமெடி நடிகர்..
தமிழ் சினிமாவில் மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த். அவரின் உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தாலும் அவரை எதிர்பார்த்து வெளியில் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். சினிமாவில் இருக்கும் போதும் சரி அரசியலில் இருக்கும் போதும் சரி மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்பவர்தான் கேப்டன்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னரே சினிமா சார்ந்த கலைஞர்களுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். நலிந்த கலைஞர்களுக்காக முதல் ஆளாக குரல் கொடுத்தவரும் விஜயகாந்த் தான். ரஜினி , கமல் மிகவும் பீக்கில் இருந்த போதும் திடீரென சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அவர்களுக்கு இணையாக விஜயகாந்தின் படமும் வெற்றி படமாக பல திரையரங்குகளில் ஓடியது. சில சமயங்களில் விஜயகாந்தின் வளர்ச்சியை பார்த்து ரஜினியும் கமலும் பயப்பட்டதுமுண்டு என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜயகாந்தின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய முழு முதற்காரணமாக இருந்தவர் தயாரிப்பாளரும் விஜயகாந்தின் நண்பருமான ராவுத்தர்தான்.
ஆரம்பகாலங்களில் விஜயகாந்தின் போக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என தனி பாதையை அமைத்துக் கொண்டு வெற்றி பாதையை உருவாக்கி கொடுத்தவர் ராவுத்தர்தான். இருவரும் சினிமாத்துறையில் நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தார்கள். இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் விஜயகாந்தை பற்றி சில சுவாரஸ்ய தகவலை கூறினார்.
அதாவது இயல்பாகவே விஜயகாந்திற்கு ரொம்ப கோவம் வருமாம். கோபம் வந்தால் உடனே கையைத் தூக்கி அடிக்கத்தான் போவாராம். பொதுவாக விஜயகாந்த் கலைஞரிடம் அதிகம் கோபப்பட்டது அவர்கள் சரிவர சாப்பிடாமல் இருப்பார்களாம். நன்றாக சாப்பிட சொல்லித்தான் விஜயகாந்த் நிறைய பேரை அடித்திருக்கிறாராம்.
ஏன் சில சமயங்களில் ராவுத்தர் கூட விஜயகாந்திடம் அடி வாங்கியிருக்கிறாராம். விஜயகாந்தை சுற்றி ஏராளமானோர் இருப்பார்களாம். எல்லாரும் அடி வாங்கியிருக்கிறாரகளாம். அடி வாங்காத ஒரே ஆளு சாரப்பாம்பு சுப்புராஜ் மட்டும்தானாம். இந்த செய்தியை ஒரு பேட்டியின் போது சுப்புராஜ் கூறினார்.
இதையும் படிங்க : கோவை சரளாவின் கெரியரையே காலி பண்ண வடிவேலு!.. குடும்பத்தையே கூண்டோடு விரட்டிய சம்பவம்..