விஜயின் கோட் படத்தில் நடிக்க இருக்கும் விஜயகாந்த்... குடும்பம் சொன்ன பதில் என்ன தெரியுமா?
Vijay: தமிழ் சினிமாவில் விஜயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணத்தில் கண்டிப்பாக விஜயகாந்துக்கும் இடம் உண்டு. அதை விஜய் மறக்காமல் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் விதமாக கோட் படத்தில் ஒரு முக்கிய விஷயத்தினை இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் தி டைம். இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தினை தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பளார்னு ஒரு அறைவிட்டார்!.. அதிலிருந்தே நான் ‘தல’க்கு தங்கச்சியா மாறிட்டேன்!.. நடிகை சொல்றதை கேளுங்க!..
இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைகா, மைக் மோகன், எஸ்.ஜே.சூர்யா, மீனாட்சி செளத்ரி என பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கிறார்கள். படத்தில் விஜயிற்கு மூன்று லுக் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஒன்றாக டி ஏஜிங் டெக்னாலஜியை கொண்டு இள வயது விஜயை கொண்டு வர இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அப்பா விஜயிற்கு ஜோடியாக சினேகா நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலுக்குள் முடிக்க விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். அந்த மாதத்திலேயே விஜயின் தளபதி69 பட அறிவிப்புகளையும் எதிர்பார்க்கலாம் எனக் கிசுகிசுக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் வந்து இருக்கிறது. விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் தி டைம் படத்தில் விஜயகாந்த் கேமியோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏஐ டெக்னாலஜி மூலம் அவர் உருவத்தினை கொண்டு வர இருக்கின்றனராம். 2ல் இருந்து 3 காட்சிகள் அவருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு விஜயகாந்த் குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு பேசினாராம்.
இதையும் படிங்க: மியூசிக் கான்சர்ட் வந்ததே அதுக்கு தான்.. ரசிகர்களிடம் அத்துமீறிய பிரபல பாடகர்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…