இதுல மட்டும் குறையே வக்கக்கூடாது.. வச்சா வேட்டியை மடிச்சிக்கட்டி சிங்கமா சண்டைக்கு நிப்பாரு!
விஜயகாந்த் என்றாலே அவர் மீது மரியாதை வைத்தவர்கள் தான் தமிழகத்தில் அதிகம். சினிமாவில் இருந்து அரசியல் வரை அவர் தனக்கென ஒரு வழியினை உருவாக்கி வைத்து இருந்தார். மக்களுக்கு எப்போதும் உதவி செய்வதில் தான் நிம்மதி என நினைப்பவர் என அவருடன் பழகிய பலரும் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கோலிவுட் தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் இருந்து, விஜயகாந்த் தான் ஷூட்டிங்கிற்கு கால்ஷூட்டாக கொடுத்து விட்டால் அதை நாளாக தான் பார்ப்பார். நான் 15 நாள் கொடுத்து விட்டால் அதில் வரும் எல்லா நேரத்தினையுமே அந்த படத்துக்கு தான்.
இதையும் படிங்க : தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு! ஜெய்லர் சக்சஸ் பார்ட்டியில் நெல்சனை கடுப்பாக்கிய ரஜினி!
ஒரு படத்துக்கு 72 மணி நேரம் தொடர்ச்சியாக ஷூட்டிங் செய்து இருக்கிறார். இதை ஏவி.எம் சரவணனனே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்ததால் அவர் மன நிம்மதி குழைந்தது. கிட்டததட்ட 40 வருட வாழ்க்கையில்லாமல் புதிய இடத்துக்கு சென்றது அவர் உடல் ஒத்துழைத்தாலும் மனதளவால் தளர்ந்தார்.
மீடியா வளர்ந்த சமயத்திலாக பார்க்கப்படும் 2009ல் இருந்து விஜயகாந்த் குடியை விட்டு விட்டார். ஒரு இடத்தில் கூட தொடவில்லை. அரசியல் தான் அவர் உடலை கெடுத்தது. இன்று அரசியல் போகாமல் சினிமாவிலேயே இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு பெரிய இடத்தில் இருந்து இருப்பார். தனித்துவமாக கதையை தேர்ந்தெடுப்பதில் விஜயகாந்த் தான் கில்லாடி.
தயவுசெய்து அவரின் சொந்த குணத்தினை கிண்டல் செய்யாதீர்கள். அவர் போன்ற தங்கம் எம்.ஜி.ஆருக்கு பிறகு இவர் ஒருவர் தான். அதுப்போல சிவாஜி இறப்பு செய்தி கேட்டு அங்கு போனவர் தான் இரண்டு நாள் அவரை அடக்கம் செய்யும் வரை அந்த குடும்பத்துடனே இருந்தார். ஒரு பிரச்னை வந்த போது கூட முதல் ஆளாக இறங்கி சரி செய்தார். போட்ட வேட்டி சட்டையை மாற்றாமலே ஓடி ஓடி உழைத்தார்.
இதையும் படிங்க : விவாகரத்தா? பாஸ் அவங்க வெள்ளி விழால கொண்டாடுறாங்க..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!
யூனிட் சாப்பாடை படக்குழுவுடன் அமர்ந்து தான் சாப்பிடுவார். அவர் சாப்பாடு சுவையாக இருப்பதுடன் தரமாக இருக்க வேண்டும் என நினைப்பார். போன்விட்டா, ஹார்லிக்ஸ், அசைவ விருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதில் கறார் காட்டுவார். அதை சரியாக செய்யவில்லை என்றால் முதலில் அடி தான் விழும். அது செய்தவருக்கு மட்டுமல்லாமல் பரிமாறியவருக்கு முதற்கொண்டு அடிதடி தான் எனத் தெரிவித்தார்.