ரஜினிக்கு செக்யூரிட்டி வேலை பார்த்தவர் விஜயகாந்த்....! அன்று எடுத்த சபதம்..! கேப்டனாக மாறிய சம்பவம்...

by Rohini |   ( Updated:2022-09-02 10:37:22  )
rajini_main_cine
X

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக 70,80களில் இருந்தவர்கள் ரஜினி, கமல். இவர்களுக்கு இடையே கடும்போட்டி இருந்த சமயத்தில் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக தோன்றியவர் தான் நம்ம கேப்டன். எடுத்த உடனயே ஹீரோவாக ஆகிவிடவில்லை.

rajini1_cine

நண்பர்கள் துணைகொண்டு ஏகப்பட்ட படக்கம்பெனிகள் ஏறி இறங்கி வாய்ப்பிற்காக அழைந்தவர் விஜயகாந்த். தெரிந்தவர்களின் துணை கொண்டு ஒரு சினிமா வினியோகஸ்தரர் பழக்கம் ஏற்பட்டு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என நம்பிக்கை கொடுத்து இருந்த விஜயகாந்திடம் ஒரு சமயம் அந்த வினியோகஸ்தரர் உனக்கு நடிக்க வேண்டுமா என கேட்டாராம்.

இதையும் படிங்கள் : இமயமலையில் பைக் ஓட்டி அசால்ட் காட்டும் அஜித்…தாறுமாறா வைரலாகும் வீடியோ…

rajini2_cine

இவர் ஆம் எனச் சொல்ல அப்போ ஒரு வேலை செய். இன்று ரஜினி, விஜயகுமார் நடித்த ஆசை 60 நாள் படத்தின் விழா நடைபெறுகிறது. அதற்காக ரஜினியும் விஜயகுமாரும் ஹோட்டலில் தங்குகிறார்கள். அவர்களை ரசிகர்களிடம் இருந்து பாதுகாக்க நீ அங்கு போய் அவர்களுக்கு காவல்காரனாக இரு என சொன்னாராம். எதற்கும் தயங்காமல் சரி என சொல்லி ஹோட்டலுக்கு சென்று பாதுகாப்பு கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்.

rajini3_cine

இன்னொரு சமயம் ரஜினியின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து இவருக்கு தமிழ் ஒழுங்கா பேச வரலைனு ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். அன்று எடுத்த சபதம். ஒரு நாள் ரஜினிக்கு இணையாக நானும் ஒரு நடிகனாக பேசப்ப்டுவேன் என உறுதியெடுத்து அடுத்தடுத்து சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்து கேப்டனாக நின்னு எல்லார் மத்தியிலும் உயர்ந்து நிற்கிறார் விஜயகாந்த்.

Next Story