Cinema News
விஜயகாந்தின் டூயட் ஆசைக்கு ஆப்புவைத்த நடன இயக்குனர்.. நடிகையோட இருந்த லவ்வுதான் காரணமாம்!…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். அவர் இப்போது நடிக்கவில்லை என்றாலும் அவருடைய சினிமா அனுபவங்களை பற்றிய பல செய்திகள் நாள்தோறும் செய்திகளிலும் ஊடகங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதன்மூலம் விஜயகாந்த் மீது எந்த அளவு ரசிகர்கள் பற்று உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஒருவரைப் பற்றி நாம் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவர் எந்த அளவுக்கு ஒரு நல்ல மனிதராக இருப்பார் என நினைக்க முடிகிறது. அதே மாதிரி தான் சினிமாவை பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் அவருக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் பற்றி தான் அளவுக்கு அதிகமாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று அழைத்த காலமும் உண்டு. ஏனெனில் எம்ஜிஆர் எப்படி கஷ்டப்படும் நபரை பார்த்து மனம் கலங்குகிறாரோ அதே குணம் படைத்தவர் தான் விஜயகாந்த். இருக்கிறதோ இல்லையோ அவரால் முடிந்த அளவுக்கு அவர் நன்றாக இருக்கும் வரை உதவிகளை செய்து கொண்டே தான் வந்திருக்கிறார்.
இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு கூறினார். விஜயகாந்த், நடிகை சிம்ரன் இணைந்து நடித்த படம் கண்ணு பட போகுதய்யா. அந்தப் படத்தில் விஜயகாந்த் சிம்ரன் சம்பந்தப்பட்ட ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்குவதற்கு நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தை வரவழைத்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க :இந்த பட்ஜெட்ல ஒரு படமே எடுத்துடலாம்!.. சம்பளத்தை பல கோடி ஏத்தி தயாரிப்பாளர்களை அலறவிடும் அட்லீ!…
அந்த பாடல் காட்சிகள் முழுவதும் எடுத்து முடித்தாகி விட்டது. அதை போட்டு பார்த்த விஜயகாந்த் இது டூயட் பாடல் தானே?எங்கள் இரண்டு பேரையும் தனித்தனியாக எடுத்து வைத்திருக்கிறாய் என கேட்டாராம். அதன் பிறகு தான் தெரிந்ததாம் ராஜூ சுந்தரமும் சிம்ரனும் காதலிக்கிறார்கள் என்று. தான் காதலித்த ஒரு பெண்ணை வேறு ஒருவருடன் படத்தில் கூட இணைத்து பார்க்க முடியாத ராஜுசுந்தரத்தை பார்த்து மிகவும் கிண்டல் அடித்தாராம் விஜயகாந்த்.