விஜயகாந்த் நடித்த ப்ளாப் ஆன படங்கள் - ஓர் பார்வை

by sankaran v |   ( Updated:2022-02-04 14:08:34  )
விஜயகாந்த் நடித்த ப்ளாப் ஆன படங்கள் - ஓர் பார்வை
X

vijayakanth

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்துக்கு தமிழ்சினிமாவில் பல படங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. பழைய படங்களில் இவரது படங்கள் ரஜினி, கமல் படங்களுக்கே சவால் விடும் வகையில் ஹிட் அடிப்பதுண்டு. 2000க்குப் பிறகு வந்த பல படங்கள் விஜயகாந்த்துக்கு சரிவர அமையாமல் போனது. இவரது படங்களில் எதிர்பார்த்து வெற்றி பெறாமல் தோல்வி அடைந்த சில படங்களைப் பார்க்கலாம்.

கஜேந்திரா

gajendra movie

2004ல் வெளியான இந்தப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். தேவா இசை அமைத்துள்ளார். விஜயகாந்த், பிலோரா. லயா, சீதா, சரத்பாபு, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இது அதிரடி படமாக இருந்தபோதும் வெற்றி பெறவில்லை.

எங்கள் ஆசான்

2009ல் வெளியான இந்தப்பத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் படம் ப்ளாப் ஆனது. விஜயகாந்த், விக்ராந்த், ராம்கி, செரில் பிரிண்டோ, அக்சயா உள்பட பலர் நடித்தனர். கலைமணி இயக்கினார். சபேஸ் முரளி இசை அமைத்துள்ளார்.

சபரி

sabari movie

சுரேஷ் இயக்கிய இந்தப்படம் 2007ல் வெளியானது. விஜயகாந்த், ஜோதிர்மயி, மாளவிகா, மகாதேவன், ராஜஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல நாவல் ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகரன் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் திகில் கதை எழுதுவதில் வல்லவர். மணி சர்மா இசை அமைத்துள்ளார். இந்தப்படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

தர்மபுரி

பேரரசு இயக்கிய இந்தபப்படம் 2006ல் வெளியானது. விஜயகாந்த், லட்சுமி ராய், விஜயகுமார், ராஜ்கபூர் உள்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்தார். படம் அதிரடியாக இருந்தபோதும் ரசிகர்களைக் கவரவில்லை.

நெறஞ்சமனசு

neranja manasu

2004ல் வெளியான இந்தப்படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். விஜயகாந்த், சூசன், சம்பத்ராஜ், மனோரமா, வினுசக்கரவர்த்தி, மன்சூர் அலிகான், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். 2004ல் வெளியானது. இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைத்தார். விஜயகாந்த் படங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டு ப்ளாப் ஆன படங்களில் இதுவும் ஒன்று.

தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு கடைசியாக வந்த படங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. காரணம் அவர் உடல் பருமன் என்றும் சொல்லலாம். நரசிம்மா, ராஜ்ஜியம், மரியாதை போன்ற படங்களும் ப்ளாப் ஆனது.

Next Story