விஜயகாந்துக்கு 60 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவம்!.. இழப்பிலும் பக்க பலமாக இருந்த அந்த நபர்..

vijayakanth
தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகராக கிட்டத்தட்ட எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக தொட்டு பழகக்கூடிய நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆரின் சிறப்பம்சங்கள் சிலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தவர் தான் கேப்டன்.

vijayakanth
மதுரையில் இருந்து வந்து வில்லனாக நடித்து அதன் பின் ஹீரோவாக உயர்ந்தவர் விஜயகாந்த். ஏகப்பட்ட அவமானங்கள் சர்ச்சை பேச்சுகள் என அனைத்திலும் சிக்கியவர் தான். எத்தனையோ கஷ்டங்களை இவர் அடைந்திருந்தாலும் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.
சொல்லப்போனால் இதுவரை இவரால் நஷ்டம் அடைந்தவர்கள் என யாருமில்லை. அள்ளி அள்ளி கொடுத்தவர் தான் விஜயகாந்த். ஆனால் இவர் பட்ட நஷ்டங்கள் ஏராளம். இதை நிரூபிக்கும் பொருட்டு ஏன் அனைவருக்கும் அறிந்த விஷயம் என்றாலும் அதை விஜயகாந்தே அழகாக ஒரு பேட்டியில் விவரித்திருப்பார்.

vijayakanth
ஆனால் அந்த பேட்டியில் தான் பட்ட நஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காக கூறியிருக்க மாட்டார். தான் என்ன வேதனை பட்டாலும் எத்தனையோ அவமானங்களுக்கு ஆளானாலும் எனக்கு என் மனைவி எப்போதுமே பக்கபலமாகவே இருந்திருக்கிறார் என்பதை தெரிவிக்கும் வகையில் விளக்கியிருப்பார்.
எல்லாரும் சொல்வார்கள், கணவனே கண் கண்ட தெய்வம் என்று, ஆனால் எனக்கு என் மனைவியே கண் கண்ட தெய்வம் என்று தான் சொல்வேன் என்று கூறியிருந்தார். என்னுடைய கல்யாணம் மண்டபம், கல்லூரி கட்ட அடிக்கல் போட்டதே என் மனைவி தான் என்றும் அவர் கிராமத்தில் இருந்து வந்தவர் ஆதலால் இதை செய்யவேண்டும் எனவும் நினைத்து கட்டினார்.

vijayakanth
நான் கூட சொன்னேன், நான் அரசியலுக்கு வந்தபிறகு அதெல்லாம் அழிக்கப்படும் அபாயத்திற்கு ஆளாகும், வருமான வரித்துறை தொந்தரவு இருக்கும் என்றெல்லாம் சொன்னேன். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட தயங்காமல் வந்தால் நான் சமாளிக்கிறேன் என்று கூறினார். சொன்னமாதிரியே மண்டபத்தை இடிச்சு அரசிடமிருந்து 8 கோடி இழப்பீடாக கொடுத்தார்கள். ஆனால் நான் 70 கோடிக்கு கட்டினேன்.கிட்டத்தட்ட 60 கோடி வரை எனக்கு நஷ்டம். இருந்தாலும் என் மனைவி பக்க பலமாக இருந்தார் என்று விஜயகாந்த் கூறினார்.