இப்பவும் அந்த படம் போட்டா டி.ஆர்.பியில் no.1 தான்!...அப்படிப் பட்ட படத்தில் விஜயகாந்த் பயந்த ஒரு விஷயம்!..
தமிழ் சினிமாவிற்கு ஒரு அடித்தளமாக அமைந்த படமாக ஊமைவிழிகள் திரைப்படம் விளங்கியது. படம் முழுவதும் திக் திக் காட்சிகள் என ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. தமிழ் சினிமாவில் ஏற்கெனவே கண்ட காதல் காட்சிகள், பழிவாங்குதல் என அனைத்திற்கும் இந்த படம் வித்தியாசமான அணுகுமுறையை கொடுத்தது.
இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நடிகர் வாகை சந்திரசேகர், நடிகர் விஜயகாந்த், நடிகர் அருண்பாண்டியன், நடிகர் கார்த்திக் என பல நடசத்திரங்கள் அன்றே ஒன்றாக நடித்த படமாக ஊமைவிழிகள் படம் அமைந்தது.
இதையும் படிங்கள் : ஆண்மைத்தன்மை இருக்கா?..பொன்னியின் செல்வனில் ஏன் அத காட்டல?..விளாசிய பிரபல இயக்குனர்..
இந்த படத்தை சென்னை திரைப்படக் கல்லூரியில் வந்த அப்போதைய மாணவர்களான ஆபாவாணனுடன் சேர்ந்து அவரது நண்பர்கள் இணைந்து தயாரித்தனர். முதலில் படத்திற்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்த பின் வாகை சந்திரசேகரிடம் அவர் கதாபாத்திரத்திற்காக அவரை அணுகியிருக்கின்றார் ஆபாவாணன். மீதமுள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் தேர்வு செய்து விட்டீர்களா என சந்திரசேகர் கேட்க விஜய காந்த் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிகர் சிவக்குமாரை நினைத்திருக்கிறார் ஆபாவாணன். ஆனால் சந்திரசேகர் விஜயகாந்த சரியாக இருப்பார் என கூற அவரை தெரியாது என ஆபாவாணன் கூறியிருக்கிறார்,
ஒன்றும் கவலை வேண்டாம் நான் பேசுகிறேன் என சந்திரசேகர் விஜயகாந்திடம் படத்தின் கதையை கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் கூற சம்மதித்து விட்டாராம் விஜயகாந்த். பின்னர் யார் படம் என கேட்க ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் என்று சொன்னதும் ஐயோ வேண்டாம் என பயந்தாராம். இப்பொழுது தான் நாமலே தத்தி தத்தி வந்து கொண்டு இருக்கிறோம். இது சரி வராது என பயந்தாராம். வாகை சந்திரசேகர் வற்புறுத்தி அதன் பின் சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால் படம் வெளியாகி மாபெரும் வெற்றி. வெற்றிவிழா படமாக மாறியது.