ரஜினி ரசிகன்னு இங்க வராத!..என்ன பெரிய ரஜினி?...கடுப்பான விஜயகாந்த்...அதிர்ந்துபோன இயக்குனர்....

தமிழ் சினிமாவில் ரஜினி உச்சத்தில் இருக்கும் போதே விஜயகாந்த் வாய்ப்புக்காக கோடம்பாக்கம் முழுவதும் அலைந்து கொண்டு தான் இருந்தார். படிபடியாக தனது விடா முயற்சியால் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நடித்த முதல் படமே தோல்வியை தழுவியது.
பின் விடாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரஜினிக்கு இணையான அந்தஸ்தை பெற்றார். ஒரு சமயம் அவர் நடித்த படமான கண்ணுப்பட போகுதய்யா படத்தின் இயக்குனர் பாரதி கணேஷ் அந்த படத்திற்காக நடனம், நகைச்சுவை எல்லாம் பண்ணச் சொல்லியிருக்கிறார்.
கூடவே விஜயகாந்திடம் சார் ரஜினி சார பாருங்க. குழந்தை தனமான நடிப்பு, ஹ்யூமர் எல்லாம் வைத்து எப்படி நடிக்கிறார் பாருங்க. அந்த மாதிரி நடிப்பு வேண்டும், நடனம் வேண்டும் என கேட்டிருக்கிறார்.
உடனே கடுப்பான விஜயகாந்த் ரஜினி ரஜினினு வராத என சொல்ல இயக்குனர் சார் நான் ரஜினி ரசிகனாக சொன்னேன் என கூறினாராம். உடனே கேப்டன் ரஜினி ரசிகனாக வேண்டும் என்றால் இருந்துக்கோ. ஆனால் இது விஜயகாந்த் படம் என சொல்லி கடுப்பாகி விட்டாராம். அப்பொழுது அந்த படத்தின் டான்ஸ் மாஸ்டராக இருந்த லாரன்ஸ் மாஸ்டர் விஜயகாந்தை சமாதானம் படுத்தி ஆடச் சொல்லியிருக்கிறார்.