மூச்சுவிடுவதில் சிரமம்.. மருத்துவமனையில் அட்மிட்டான விஜயகாந்த்… என்ன நடந்தது?

Published on: November 20, 2023
---Advertisement---

Vijayakanth: தமிழ் சினிமா நடிகர்களிலேயே மிகவும் எளிமையான நடிகராக அறியப்பட்டவர் விஜயகாந்த். ஆக்‌ஷன் படங்கள் நடித்தே ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது உடல்நல கோளாறால் சிகிச்சையில் இருக்கிறார். மேலும் அவர் குறித்து வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமலுடன் போட்டி போட்டு நடித்தவர் விஜயகாந்த். சண்டை காட்சிகள் என்றால் கூட டூப் போடாமல் அவர் செய்த பல படங்களே அவருக்கும் நடிப்புக்கும் மீதான ஆர்வத்தினை சொல்லும். நடிகர் சங்கத்தின் தலைவராக பல வருடம் நீடித்தார்.

Also Read

இதையும் படிங்க: ரச்சிதா என்னை மாமியாராவே பார்க்கலை… இப்பக்கூட இது நடந்துச்சு… தினேஷின் பெற்றோர் சொன்ன சம்பவம்!

நடித்துக் கொண்டு இருக்கும் போதே அரசியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார். முதல் சில வருடம் தடுமாறினாலும் 2011ம் ஆண்டு தேர்தல் நிறைய இடங்களை இவரின் தேமுதிக வென்றது. இதனால் எதிர்கட்சி தலைவராகும் அந்தஸ்த்தை கொடுத்தனர்.

ஆனால் அரசியலில் வளர வேண்டிய நேரத்தில் இவரின் உடல் கோளாறால் மொத்தமாக முடங்கினார். வீட்டை விட்டே வெளியில் வரவில்லை. அவ்வப்போது பண்டிகை நாட்களில் அவர் படம் குடும்பத்தினரால் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் கடைசியாக தீபாவளி தினத்தில் குடும்பத்தினருடன் அவர் புகைப்படம் வெளியானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்தனர்.

இதையும் படிங்க: திருமணமானவர்னு தெரிஞ்சும் அவர் கூட போனதுதான் நான் செஞ்ச தப்பு! நடிகையின் வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா?

இதனால் அவர் தற்போது செயற்கை சுவாசத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க அவருக்கு காய்ச்சல், சளி கோளாறு தான் விரைவில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.