More
Categories: Cinema News latest news

விஜயகாந்த் எனக்கு செஞ்ச உதவி! 15 வருஷமா அவருக்காக இத செய்றேன் – கேப்டன் புகழ்பாடும் ஐசரி கணேஷ்

Isari Ganesh: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். இவரது அப்பா ஐசரி வேலன் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்வாய்ந்த நடிகராக இருந்தவர்.ஐசரி வேலனுக்கும் அவரது  மனைவிக்கும் ஐசரி கணேஷை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்றுதான் ஆசையாம்.

ஆனால் ஐசரி கணேஷுக்கு அரசியலுக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஒரு சமயம் ஐசரி வேலன் இறந்துவிட என்ன செய்வதென்று தெரியாமல் எம்ஜிஆரை பார்க்க ஐசரி கணேஷ் சென்றாராம். அவரிடம் ஏதாவது வேலை கேட்கலாம் என்றுதான் போயிருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க : சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு தூக்கி கொடுத்த பிரபலம்!… இப்படி தான் இந்த விஷயம் நடந்துச்சாம்!

ஆனால் எம்ஜிஆர் முதலில் டிகிரியை  முடித்துவிடு. அதன் பிறகு எனக்கே பி.ஏ.வாக உன்னை பணியமர்த்திக் கொள்கிறேன் என்று சொல்லி எம்ஜிஆர் அனுப்ப ஐசரி கணேஷ் டிகிரியை  முடிப்பதற்குள் எம்ஜிஆர் இறந்துவிட்டாராம். அதன் பிறகு குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஐசரி கணேஷ் ஒரு ஃபார்மஸியை ஆரம்பித்தாராம்.

அதுவும் ஐசரி வேலன் இறந்த போது அவரது குடும்பத்திற்காக எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வைத்துதான் அந்த ஃபார்மஸியை ஆரம்பித்திருக்கிறார். படிப்படியாக பல தொழில்கல்லூரிகளை ஆரம்பித்து இன்று 43 இன்ஸ்டியூட்களை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இளம் சான்சலராக இருந்து வருகிறார் ஐசரி கணேஷ்.

இதையும் படிங்க : தலைவன் வேற ரகம்! இன்னும் காஷ்மீரில் குளிர்காயும் அண்ணாச்சி.. மாத்தியோசி ஸ்டைலில் வைரலாகும் வீடியோ

அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் நலிவடைந்த ஒரு 450 கலைஞர்களுக்கு மாதந்தோறும் பென்சன் என்ற விதத்தில் சில தொகைகளையும் கொடுத்தும் வருகிறாராம் ஐசரி கணேஷ். அதற்கு காரணம் விஜயகாந்த் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். அதாவது நடிகர் சங்கத்தலைவராக விஜயகாந்த் இருந்த போது ஐசரி கணேஷிடம் ‘இப்படி பென்சன் எதாவது நலிவடைந்த கலைஞர்களுக்கு உன்னால் முடிந்த தொகையை கொடுக்கலாமே’ என விஜயகாந்த் கூறினாராம்.

அதிலிருந்தே ஆரம்பித்தவர் இன்று வரை அதை தவறாமல் பின்பற்றி வருகிறாராம். விஜயகாந்த் வார்த்தைக்கு இப்படி ஒரு மரியாதை ஏன் என விசாரித்த போது ஐசரி வேலன் இறந்த சமயம் நடிகர் சங்கத்தில் இருந்துதான் அவரது இறுதி அஞ்சலி நடைபெற்றதாம். அதை திறம்பட நடத்திக் கொடுத்தவரே விஜயகாந்த்தான் என்று ஐசரி கணேஷ் கூறினார்.

இதையும் படிங்க : டிவியில் எப்ப போட்டாலும் டி.ஆர்.பி.-யில் சம்பவம் செய்யும் 5 திரைப்படங்கள்!. மாஸ் காட்டும் விஸ்வாசம்!..

 

Published by
Rohini

Recent Posts