கவுண்டமணியை மதிக்காமல் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த்...அட இது தெரியாம போச்சே!...
திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு பின் பலருக்கும் பல உதவிகளை செய்தவர் நடிகர் விஜயகாந்த். திரையுலகினரும், ரசிகர்களும் அவரை கேப்டன் என அழைத்து வருகின்றனர். திரையுலகில் 400க்கும் மேற்பட்டவர்கள் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்து அறிமுகம் செய்துள்ளார். இதில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் அடக்கம்.
திரையுலகில் படப்பிடிப்பில் நடிகர்கள் முதல் லைட்மேன் வரை எல்லோருக்கும் சரிசமமான உணவு கொடுக்க வேண்டும் என்பதை அறிமுகம் செய்தவரே அவர்தான். அதனால்தான் திரையுலகில் எல்லோருக்கும் பிடித்தவராக விஜயகாந்த் இருக்கிறார். மேலும், அவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலும் விஜயகாந்த் பார்த்துக்கொள்வார்.
நடிகர் வடிவேலுவை அறிமுகம் செய்தவர் ராஜ்கிரண் என்றாலும் அவருக்கு சில வாய்ப்புகளை கொடுத்து தூக்கிவிட்டவர் விஜயகாந்த் என்பது பலருக்கும் தெரியாது.
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றார் வடிவேல். ஆனால், அவரை நடிக்க வைக்க வேண்டாம் என கவுண்டமணி கூறிவிட்டார். இதை வடிவேல் விஜயகாந்திடம் கூற, இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரை அழைத்து இந்த படத்தில் வடிவேலு நடிக்க வேண்டும். படம் முழுக்க எனக்கு அருகில் குடை பிடித்தபடி வரும் வேடத்தை அவருக்கு கொடுங்கள் எனக்கூற, அப்படித்தான் சின்ன கவுண்டர் படத்தில் நடித்தார் வடிவேலு.
ஆனால், அதே வடிவேலு விஜயகாந்த் தனக்கு செய்த உதவியை மறந்து, பின்னாளில் அவரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார் என்பதுதான் வரலாறு.