அந்த படம் ஓடலன்னா கன்னியாஸ்திரி ஆகி இருப்பேன்.. விஜயகாந்த் பட நடிகை சொன்ன பகீர் தகவல்...

சினிமாவில் நடிப்பதை சிலர் விரும்பி ஏற்பார்கள். அதாவது நடிகை ஆகவேண்டும் என ஆசைப்பட்டே சிலர் சினிமாவுக்கு வருவார்கள். பல முயற்சிகளும் செய்து வாய்ப்பு தேடுவார்கள். கிடைத்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என போராடுவார்கள். அப்படி நடித்த படம் ஹிட் அடித்துவிட்டால் மார்க்கெட்டை தக்க வைக்க போராடுவார்கள்.
நடிகையாக படப்பிடிப்பில் கிடைக்கும் அந்தஸ்து, ரசிகர்களிடம் கிடைக்கும் புகழ், அதிக சம்பளம் என எதையுமே அவர்களால் விட்டு கொடுக்க முடியாது. இதனால்தான் மார்க்கெட் போனாலும் சில நடிகைகள் எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிக்கொண்டே இருப்பார்கள்.
இதையும் படிங்க: விஜய் பட நடிகைக்கு விஜயகாந்த் வைத்த செல்லப் பெயர்!.. குசும்பு பிடிச்சவர் போல கேப்டன்!..
சில பெண்கள் விருப்பமில்லாமல் சினிமாவுக்கு வருவார்கள். அதற்கு காரணம் அவர்களின் குடும்ப சூழலாக இருக்கும். லட்சம் லட்சமாக வரும் சம்பளத்திற்காக தனது பெண்ணை வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வைத்த பலரும் இங்கே இருக்கிறார்கள். நடிகை சுஜாதா கூட அப்படித்தான் சினிமாவில் நடித்தார். இப்படி பல உதாரணங்கள் திரையுலகில் இருக்கிறது.
மறைந்த நடிகை மற்றும் முதல்வர் ஜெயலலிதா கூட அம்மா வற்புறுத்தியதால் சினிமாவுக்கு வந்தவர்தான். அவருக்கு பிடிக்காமல்தான் பல படங்களிலும் நடித்தார். அவருக்கு பேராசிரியை ஆக வேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் என பல கனவுகள் இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.
ஆர்.சவுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 1984ம் வருடம் வெளிவந்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இந்த படத்தில் இடம் பெற்ற ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ இப்போதும் இளசுகளுக்கு பிடித்த பாடலாக இருக்கிறது. இந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக, அதாவது வைதேகியாக நடித்தவர் பிரமிளா ஜோஷை. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.
இதையும் படிங்க: உங்களை திட்டுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன கூல் பதில்!…
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவரின் வீட்டில் அனுமதி கொடுக்கவில்லையாம். ‘நீ சினிமாவில் நடிக்கப்போனால் உனக்கு திருமணமே ஆகாது. காலத்துக்கும் கன்னியாகத்தான் இருக்கணும்’ என சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி நடிக்க வந்தவர் இவர்.
ஊடகம் ஒன்றில் இதை பகிர்ந்த பிரமிளா ‘வைதேகி காத்திருந்தாள் படம் தோல்விப்படமாக அமைந்திருந்தால் கன்னியாஸ்திரி ஆகியிருப்பேனே தவிர கண்டிப்பாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என நினைத்திருக்க மாட்டேன்’ என சொல்லி இருந்தார். இவரின் மகள் மேக்னாராஜ் பின்னாளில் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.