சான்ஸ் கேட்டு வந்த நடிகரை அவமானப்படுத்திய உதவியாளர் - கேப்டன் தெரிஞ்சு சும்மா இருப்பாரா?

by Rohini |
viji
X

viji

விஜயகாந்த் நடிப்பில் சுபாஷ் இயக்கத்தில் மணிரத்தினம் கதை திரை கதையில் வெளிவந்த படம் சத்ரியன். இந்தப் படத்தில் விஜயகாந்த் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். சத்ரியன் படம் வெளியாகி எப்பேர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என்று அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் நடிகர் வின்சென்ட் ராய்.

சத்ரியன் படத்தில் மணி பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் வின்சென்ட் ராய். சினிமா மீது இருந்த ஆசையால் கிட்டத்தட்ட சென்னைக்கு வந்து 15 வருடங்களாக வாய்ப்புகளுக்காக காத்திருந்து சத்ரியன் படத்தின் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் வின்சென்ட் ராய். அப்போது படப்பிடிப்பில் தனியாக இருந்த விஜயகாந்த் இடம் வாய்ப்பு கேட்கலாம் என்று கருதி அவருடைய நிலைமையை எடுத்து சொல்லி இருக்கிறார் வின்சென்ட் ராய்.

விஜயகாந்த் "சரி கண்டிப்பாக வாய்ப்பு வந்தால் சொல்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார் .ஆனால் வின்சென்ட் ராய் மற்ற நடிகர்களைப் போலத்தான் விஜயகாந்த் என்று நினைத்து இருந்து விட்டாராம். ஆனால் 6 மாதம் கழித்து இவரை ஞாபகம் வைத்திருந்த விஜயகாந்த் தன்னுடைய கேப்டன் பிரபாகரன் படத்திற்காக அழைத்திருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு கோர்ட் சீன். அதில் ஏற்கனவே 20 நீதிபதிகள் இருக்க அதில் ஒரு ஆர்ட்டிஸ்ட் மட்டும் வசனம் பேச வரவில்லையாம் அதற்காக இவரை அழைத்து இருக்கிறார்.

viji1

viji1

இவரும் சரி நம்மை ஞாபகம் வைத்து இருக்கிறாரே எனக் கருதி கேப்டனுக்காக இந்த வாய்ப்பை ஒத்துக் கொண்டாராம் .உடனே விஜயகாந்த்" உள்ளே ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார், அவரிடம் உனக்கு உள்ள ஆடையை போட்டு கொண்டு வா" என சொல்லி இருக்கிறார். வின்சென்ட் ராய் உள்ளே போய் அங்கு இருந்த உதவியாளரிடம் தனக்குள்ள டிரஸ்ஸை கேட்டிருக்கிறார். அவரோ "மறுபடியும் இன்னொரு நீதிபதியா? எத்தனை பேர் வருவீங்க? போ போ அங்கே இருக்கு போய் போட்டுக்கொள்" என மரியாதை இல்லாமல் சொல்லி இருக்கிறார்.

அந்த ட்ரெஸ்ஸை போட்ட வின்சென்ட் ராய் தனது ஒரு பக்க கையில் கிழிந்து இருக்கிறது. மறுபக்க கை மிகவும் டைட்டாக இருந்திருக்கிறது .இதை அந்த உதவியாளரிடம் சொல்ல அதற்கு அவரோ "பெரிய பராசக்தி வசனம் பேசப்போற! சும்மா தானே உட்கார போற, போட்டுக்கோ" என மரியாதை இல்லாமல் சொன்னாராம். இதனால் மிகவும் நொந்து கொண்ட வின்சென்ட் ராய் "இதை எப்படியாவது கேப்டனிடம் சொல்லி அவரை திட்டு வாங்க வைக்க வேண்டும்" என நினைத்தாராம் .ஆனால் நேரடியாகவும் சொல்லக்கூடாது, மறைமுகமாக சொல்ல வேண்டும் என எண்ணி இருக்கிறார்.

உடனே அந்த ஷார்ட் ரெடி ஆனதும் அந்த சீனில் வின்சென்ட் ராய் கூண்டில் இருக்கும் விஜயகாந்த்திடம் விசாரிப்பதாக அந்த காட்சி படமாக்கப்பட வேண்டும். உடனே வின்சென்ட்ராய் "யுவர் ஆனர்" என்று கையை நீட்டி பேச வேண்டும். இவர் வேண்டுமென்றே கையை நீட்ட முடியாமல் சிறியதாக நீட்டி இருக்கிறார். உடனே விஜய்காந்த் கட் கட் என சொல்லி என்னாயிற்று என கேட்டாராம் .அதற்கு வின்சென்ட் ராய் "டிரஸ் மிகவும் டைட்டாக இருக்கிறது" என்று சொல்லி இருக்கிறார் .

viji2

viji2

உடனே கேப்டன் "எங்கே அந்த ஆடை வடிவமைப்பாளர்? வரச் சொல்லு" என்று சொன்னதும் பதற்றத்தில் ஓடி வந்தாராம் அந்த உதவியாளர். அவரை சரமாரியாக திட்டியதோடு இன்னும் 15 நிமிடங்களில் வேற ஒரு புதிய ஆடையை கொடுக்க வேண்டும் .அதுவரைக்கும் படப்பிடிப்பு நடத்தப்படாது என சொல்லிவிட்டாராம். அதன் பிறகு அந்த ஆடை வடிவமைப்பாளர் வின்சென்ட் ராய்க்கு புதியதொரு ஆடையை தைத்துக் கொடுத்ததோடு மிகவும் மரியாதையாக பேசினாராம் .இதை ஒரு பேட்டியில் கூறிய வின்சென்ட் ராய் விஜயகாந்த் மனிதாபிமானம் இன்று வரை வேறு எந்த நடிகருக்குமே இல்லை. அவர் எப்பேர்ப்பட்ட ஒரு நடிகர் என்று வியந்து பேசி உள்ளார்.

Next Story