அவர் கேப்டன்தான்! ஆனால் எனக்கு அம்மா – விஜயகாந்த் செய்த உதவியை நினைத்து கண்கலங்கிய பிரபலம்

Published on: December 11, 2023
viji
---Advertisement---

Captain Vijayakanth: தமிழ் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். மக்களின் அமோக வரவேற்பை பெற்றவர். இவரது புகழ் எட்டுத்திக்கும் பரவியது. அதன் விளைவுதான் அரசியலிலும் காலடி எடுத்து வைக்க உதவியது.

எத்தனையோ பேருக்கு விஜயகாந்த் பல நல்ல உதவிகளை செய்திருக்கிறார்.இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விஜயகாந்தை பற்றியும் அவருடன் பழகியதை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: முகத்தை திருப்பிக்கொண்ட பிரபல நடிகர்..! அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்து லைக் வாங்க வைத்த சிவாஜி..!

விஜயகாந்தை அண்ணா என்றுதான் பாஸ்கர் அழைக்கிறார். அவருக்கு நடிகர் சங்கத்தில் கார்டு வாங்கிக் கொடுத்ததே விஜயகாந்த்தானாம். இதை பல பேட்டிகளில் பாஸ்கர் சொல்ல கேட்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கஜேந்திரா படத்தில் பாஸ்கர் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பாஸ்கர் கூறினார். படப்பிடிப்பு முடிந்ததும் பாஸ்கர் அருகில் இருக்கும் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பாராம். அதை விஜயகாந்த் பார்த்துக் கொண்டேயிருப்பாராம்.

இதையும் படிங்க: பால் கொழுக்கட்ட மாதிரி சும்மா கும்முன்னு இருக்க!.. சைனிங் அழகில் தவிக்கவிட்ட தர்ஷா…

பார்த்தது மட்டுமில்லாமல் அனைவரையும் கூப்பிட்டு பாஸ்கர் உறங்குவதை ரசித்துக் கூறுவாராம். அதில் ஒரு சில பேர் எழுப்ப நினைக்கும் போது அதற்கு விஜயகாந்த் ‘ச்ச ச்ச வேண்டாம். நன்கு சாப்பிட்டு அசதியில் தூங்குவான். அவன் ஷாட் வரும் போது போய் எழுப்புங்கள்’ என்று கூறிவிடுவாராம்.

அந்தளவுக்கு ஒரு தாய் தன் மகன் தூங்குவதை பார்த்து ரசிப்பாள். அதே போல் தான் விஜயகாந்தும். அவர் எனக்கு அம்மா மாதிரி. அவர் மீண்டும் பூரண நலம் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்ப வரவேண்டும் என கண்கலங்கி பேசினார்.

இதையும் படிங்க: ப.பாண்டியில் செஞ்சதை இந்த படத்துக்கு செய்யலை… யாரும் சொன்னாலும் நம்பாதீங்க.. தனுஷ் தரப்பு விளக்கம்..!

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.