7 நாள் கால்ஷீட் கொடுத்து 70 நாள்கள் நடித்துக் கொடுத்த விஜயகாந்த்!.. என்ன படம் தெரியுமா?..

Published on: February 28, 2023
vijayakanth
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகர் என்றால் அது விஜயகாந்த் மட்டும் தான். இன்றைய சூழலில் அவரின் உடல் நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால் சினிமாவின் போக்கையும் மாற்றியிருப்பார், அரசியலின் போக்கையும் மாற்றியிருப்பார். ஆனால் உடல் நிலை சரியில்லாமல் சாதாரணமாக வெளியே வரக்கூடிய சூழ்நிலையிலும் இல்லாமல் இருக்கிறார்.

அவர் கெரியரில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படங்களில் மிகவும் குறிப்படத்தக்கப் படம் என்றால் அது ‘ஊமை விழிகள்’ திரைப்படம். இந்தப் படத்தில் விஜயகாந்த் ரோலுக்கு முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சிவக்குமார் தானாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் சிவக்குமாரால் நடிக்க முடியவில்லையாம். அதனை அடுத்து முதலில் நடிக்க கமிட் ஆனவர் சந்திரசேகர். அவர் தான் போலீஸ் கதாபாத்திரமான தீனதயாளன் ரோலுக்கு விஜயகாந்த் நடித்தால் சரிவரும் என்று சொன்னதன் பேரில் விஜயகாந்த் கமிட் ஆகியிருக்கிறார்.

vijayaakanth1
vijayaakanth1

முதலில் இந்தப் படத்திற்காக விஜயகாந்த் 7 நாள்கள் தான் கால்ஷீட் கொடுத்தாராம். ஆனால் அப்படியே விறுவிறுப்பாக போக 70 நாள்கள் வரை நீண்டுவிட்டதாம். எனினும் விஜயகாந்த் தொடர்ந்து நடித்துக் கொடுத்து விட்டு தான் போனாராம். நடிப்பது மட்டுமில்லாமல் இந்தப் படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் பணியாற்றினாராம் விஜயகாந்த்.

இதையும் படிங்க : வரலாறு படைத்த மணிவண்ணன்-சத்யராஜ்-இளையராஜா காம்போ.. அது என்னன்னு தெரியுமா..?

கிராஃபிக்ஸ் இல்லாத காலகட்டத்திலும் ஊமைவிழிகள் படத்தை தத்ரூபமாக எடுத்திருப்பார் இயக்குனர் அரவிந்த ராஜ். இவர் ஏற்கெனவே விஜயகாந்தை வைத்து உழவன் மகன், கருப்பு நிலா போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறாராம். ஒரு கால கட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே கலைப்படம் மட்டும் தான் எடுப்பார்கள் என்ற எண்ணத்தை இந்த ஊமைவிழிகள் படம் வந்து மாற்றியது.

vijayakanth2
vijayakanth2

படம் எடுத்து சென்சார் போர்டுக்கு போக சென்சார் இந்தப் படத்தை தடை செய்ததாம். என்ன காரணம் என்றே தெரியவில்லையாம் ஆனால் தடை செய்ததாம். அதன் பின்னர் ட்ரிபியூணலுக்கு சென்று அதன் பிறகே படத்தை வெளியிட அனுமதித்திருக்கிறார்கள். 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் வெளியாகி இந்தப் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் ஒரு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தப் படமாக ஊமைவிழிகள் திரைப்படம் அமைந்தது.