Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. மாஸ் ஹீரோவாக ஹேண்ட்சம் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். ஆரம்பத்தில் சினிமாவே என்ன என தெரியாமல் சினிமாத்துறைக்குள் வந்தவர்.
சரியாக நடிக்கத் தெரியாது. டான்ஸ் ஆட தெரியாது என சிவக்குமார் முதலில் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். ஆனால் ஒரு படம் என சொல்லி நேருக்கு நேர் படத்தில் நடிக்க வந்த சூர்யாவை இந்த தமிழ் சினிமா வாரி அணைத்துக் கொண்டது.
இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு!.. மன்சூர் அலி கான் நச்சுன்னு சொன்ன அந்த வார்த்தை.. என்ன தெரியுமா?
இருந்தாலும் முதல் ஒரு சில படங்களில் திட்டு வாங்காத இயக்குனர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான இயக்குனர்களிடம் திட்டு வாங்கியே நடித்திருக்கிறார் சூர்யா. சூர்யாவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.
சூர்யா மட்டுமில்லாமல் விஜயின் கெரியரை மாற்றியமைத்த திரைப்படமாக அமைந்தது செந்தூரப்பாண்டி திரைப்படம் என அனைவருக்கும் தெரியும். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானதுக்கு காரணமே விஜயகாந்த் அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததுதான்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு!.. மன்சூர் அலி கான் நச்சுன்னு சொன்ன அந்த வார்த்தை.. என்ன தெரியுமா?
அதே போல்தான் பெரியண்ணா படத்திலும் சூர்யாவுடன் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். இன்று விஜய்,சூர்யா என ஒரு ஆளுமைகளாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு விதை போட்டதே விஜயகாந்த் தான்.
இந்த நிலையில் பயில்வான் ரெங்கநாதன் விஜயகாந்த் குறித்து ஒரு தகவலை கூறினார். அதாவது சூர்யாவின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க விஜயகாந்த் வீட்டிற்கு சிவக்குமார் செல்ல என்னால் வர முடியாது என சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: தைரியமா வெளியே வந்து மக்களுக்கு நல்லது பண்ணும் விஜய்!.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.. பிரபலம் ட்வீட்!
அதற்கு காரணம் அந்த நேரத்தில் விஜயகாந்த் அரசியலில் தீவிரம் காட்டிய சமயம். அதனால் சூர்யா திருமணத்திற்கு ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் எல்லாம் வருவார்கள். அதனால் நான் வர மாட்டேன் என்று சொல்லி காரணத்தை கூறினாராம் விஜயகாந்த்.
