விஜயகாந்தின் திருமணத்திற்கு தடையாக இருந்த நடிகை!.. அதையும் மீறி கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வாக்கு அதிகம் கொண்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆர், ரஜினி இவர்களின் வரிசையில் அதிக மக்கள் செல்வாக்கு கொண்ட நடிகராக விஜயகாந்த் வலம் வந்தார். ரஜினி , கமல் மிகவும் பீக்கில் இருக்கும் போதே விஜயகாந்தின் பலம் அதிகரித்திருந்தது.
சில சமயங்களில் கமலும் ரஜினியும் கூட நம்மளயே ஓவர் டேக் பண்ணிருவாரோ என்ற பயத்தில் இருந்தார்கள் என்று கூட செய்திகள் வெளியானது. சாதாரண சின்ன வேடங்களில் நடித்து அதன் பின் ஒட்டுமொத்த தமிழகமுமே கொண்டாடும் நடிகராக வலம் வந்தார் கேப்டன்.
நடிப்பையும் தாண்டி பல நல்ல உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் பிரபல நடிகையுடன் காதலில் இருந்தார் விஜயகாந்த் என்று பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறினார். அந்த நடிகை யார் என்பதையும் வெளிப்படையாகவே கூறினார்.
நடிகை ராதிகாதான் விஜயகாந்த் காதலித்த நடிகை என்று கூறினார். இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தனர். அவர்கள் ஜோடியாக நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. மேலும் விஜயகாந்தின் மொத்த தோற்றத்தையும் மிகவும் ஸ்டைலிஷாக மாற்றியவரே விஜயகாந்த் தானாம்.
ஆனால் இவர்கள் காதலை அவர்கள் வீட்டில் ஏற்கவில்லையாம். கேப்டனின் தாயார் மறைவிற்கு பிறகு விஜயகாந்த் அவரின் அக்கா பேச்சை மீறாதவராக இருந்திருக்கிறார். அவர்தான் அவர்களுடைய சமூகத்திலேயே நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.
ராவுத்தரிடமும் அழகான பெண்ணா பார்த்து வந்து சொல் என்றும் சொல்லியிருக்கிறார். ராவுத்தரும் ஏராளமான பெண்கள் புகைப்படங்களை வந்து விஜயகாந்திடம் கொடுப்பாராம். ஆனால் விஜயகாந்த் போட்டோவை பார்க்காமலேயே வேண்டாம், பிடிக்கல என்று சொல்லுவாராம்.அதன் பிறகு பிரேமலதாவை பார்த்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : அஜித்துடன் காதல் வயப்பட்ட நடிகைகள்!.. படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்!..
அவர் ஒரு சாயலுக்கு ராதிகா மாதிரி இருக்கிறார் என்பதால் ராதிகாவின் மேக்கப் மாதிரியே போட்டு அவரை புகைப்படம் எடுத்து அந்த போட்டோவை விஜயகாந்திடம் கொடுத்திருக்கின்றனர். பார்க்க ராதிகா மாதிரி இருந்ததனால் விஜயகாந்த் பிரேமலதாவை ஓகே பண்ணியிருக்கிறார். இந்த செய்தியை மிகவும் வெளிப்படையாக சபிதா ஜோசப் கூறினார்.