எத வேணுனாலும் கழட்ட தயார்!.. விஜயகாந்திற்காக மானத்தை கூட பெரிதாக நினைக்காத பிரபல நடிகர்!..
விஜயகாந்த் என்றாலே உன்னத மனிதர் என்று சொல்லுமளவிற்கு சினிமா பிரபலங்கள் மத்தியில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டார் நம்ம கேப்டன். அதற்கு காரணம் அவர் காட்டும் அக்கறையும் அன்பும் மனிதாபிமானமும் தான் முக்கிய காரணமாக அமைந்தது.
சினிமாவில் கடை நிலை ஊழியர்கள் வரை தன்னால் முடிந்த அளவுக்கு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ
அத்தனையும் செய்யும் கொடை வள்ளலாகவே வாழ்ந்து வந்தார் விஜயகாந்த். ஆனால் இன்று சரிசமமாக உட்கார்ந்து உரையாட முடியாத உடம்பு சூழ்நிலையில் இருப்பது தான் அனைவருக்கும் இருக்கும் ஒரே வருத்தம்.
அவரை பார்க்க முடியவில்லை என்றாலும் அவருடைய எண்ண ஒட்டங்களை அவ்வப்போது மற்ற நட்சத்திரங்கள் பேட்டிகளின் மூலமாகவும் அவரால் பயன் பெற்றவர்கள் மூலமாகவும் பத்திரிக்கைகளில் கண்டு வருகிறோம். அந்த வகையில் ஒரு மேடையில் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் விஜயகாந்தை பற்றி கூறியிருந்தார்.
பல ஹிட் படங்களை இயக்கி நடித்தவர் தான் பாண்டியராஜன். மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதையான நடிகராக திகழ்பவர். இவரை விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்திற்காக நடிக்க அழைப்பு விடுத்திருக்கின்றனர். அதை கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியில் பாண்டியராஜன் இருந்திருக்கிறார்.
அதன் பிறகு ஒரு நாள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் பாண்டியராஜனுக்கு ஒரே பயம். எங்க நம்மை விலக்கி விடுவார்களோ என்று பயந்தே தொலைபேசியில் பேசியிருக்கிறார். ஆனால் எதிர்பக்கம் பேசியவர்கள் சார் இந்தப் படத்தில் நீங்கள் பேண்டை கழட்டுற மாதிரி சீனில் நடிக்க வேண்டி வரும், நடிப்பீர்களா? என்று கேட்டிருக்கிறார்.
அதைக் கேட்டதும் பாண்டியராஜன் நான் அண்ட்ராயரை கழட்ட சொன்னால் கூட கழட்ட தயாருங்க, சார் படத்தில் வாய்ப்பு வந்ததே பெருசு என்று கூறியிருக்கிறார். இந்த பதிவை மேடையில் பாண்டியராஜன் கூறும்போது மேடைக்கு கீழே அமர்ந்திருந்த விஜயகாந்த் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க : ஏகப்பட்ட ஹிட் லிஸ்ட்களை கொடுத்த கூட்டணி!.. ஆனால் செய்யாத சாதனை!.. அடப்பாவமே!..