தமிழ் திரையுலகில் மக்கள் மனதை வென்ற நடிகர்கள் ஒரு சில பேர் தான் இருப்பார்கள்.எம்ஜிஆர், சிவாஜி இவர்களை தாண்டி மக்களின் அதிகளவு அன்பை பெற்றவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த். இவரை குட்டி எம்ஜிஆர் என்றே 80களில் அழைத்து வந்தனர். அந்தளவுக்கு எம்ஜிஆருக்கு அடுத்தப் படியாக மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு ஒரு நடிகராகவும் தலைவராகவும் தான் இருந்து வந்தார்.
சினிமாவில் ஏகப்பட்ட விஷயங்களை செய்து சினிமா நலனுக்காக பாடுபட்டிருக்கிறார். நடிகர் சங்க தலைவராக இருந்து நடிகர் சங்க கடனை அடைத்தவரே விஜயகாந்த் என்பது பல பேருக்கு தெரியும். தன் பசியை கூட பொருட்படுத்தாது மற்றவர்களின் பசியை போக்கியவர்.
இதையும் படிங்க : தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க!.. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி….
எந்நேரமும் கேப்டனிடம் சென்று உதவி என்று போய் நிற்கலாம். நேரம், காலம் பாராமல் ஓடி ஓடி உதவிய ஒரு நல்ல மனிதர் தான் விஜயகாந்த். சமீபத்தில் தான் தனது 71வது பிறந்தநாளை தனது தொண்டர்கள் முன்னிலையில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார் விஜயகாந்த்.
அதுவரை விஜயகாந்தை பார்க்காத ரசிகர்கள் கேப்டனை பார்த்ததும் ஆரவாரத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் விஜயகாந்த் ஆரம்பகாலத்தில் ரஜினியின் தீவிர வெறித்தனமான ரசிகராகத்தான் இருந்திருக்கிறார் என்ற விஷயம் யாருக்காவது தெரியுமா? ஆனால் அப்படித்தான் இருந்தாராம் விஜயகாந்த்.
இதையும் படிங்க : ஒரு படம் ஹிட் அடிச்சா இப்படியா!. வேற லெவலில் சம்பளம் கேட்கும் ரஜினி!. கையை பிசையும் தயாரிப்பு நிறுவனம்..
பிரபல பத்திரிக்கையாளரான சங்கர் ஒரு சமயம் விஜயகாந்தை பேட்டி எடுக்கும் போது இந்த ரகசியத்தை விஜயகாந்தே கூறினாராம். ஆரம்பகாலங்களில் ரஜினியின் படங்களை பார்த்து பார்த்து சினிமா மீது காதல் கொண்டவராம் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் மதுரை புறநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தில் செயலாளராக இருந்தாராம்.
மேலும் எப்பொழுதெல்லாம் ரஜினி மதுரைக்கு படப்பிடிப்பிற்காக வருகிறாரோ அவருக்கு பாதுகாவலராகவே இருந்திருக்கிறார் விஜயகாந்த். அதன் பிறகே நண்பர்கள் சிலர் நீயும் பார்ப்பதற்கு ரஜினி மாதிரியான தோற்றத்தில் தான் இருக்கிறாய். அதனால் சினிமாவிற்கு சென்று விடு என்று சொன்னதின் பேரில் தான் சென்னைக்கே வந்திருக்கிறார்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆரையே அவமானப்படுத்தி மிரட்டி வேலை வாங்கிய டெரர் இயக்குனர்… அது யார் தெரியுமா?…
தூரத்து இடி முழக்கம், இனிக்கும் இளமை போன்ற படங்களில் தன் பயணத்தை ஆரம்பித்த விஜயகாந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய சட்டம் ஓர் இருட்டறை என்ற படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் விஜயகாந்த் யார் என்பதை சினிமாவிற்கு அறியவைத்தார். அதன் பிறகு விஜயகாந்தின் வளர்ச்சியைத்தான் நம்மால் பார்க்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் தூரத்தில் இருந்து பார்த்த ரஜினிக்கே நிகரான போட்டியாளராக சினிமாவில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார் கேப்டன். இன்று ரஜினி, கமலின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் ஒரு வேளை விஜயகாந்த் உடல் நலம் நன்றாக இருந்து படத்தில் நடித்திருந்தால் அவரின் வெற்றியையும் சேர்த்தே கொண்டாடியிருப்பார்கள்.
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…