விஜயகாந்த் நடித்த மாஸ் ஹிட் திரைப்படம்… ரீமேக்கில் பின்னி பெடலெடுத்த ரஜினியும் கமலும்… இது தெரியாம போச்சே!
1981 ஆம் ஆண்டு விஜயகாந்த், பூர்ணிமா தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை”. இத்திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். வடலூர் எஸ்.சிதம்பரம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். விஜயகாந்த்தின் கேரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் இது.
இந்த நிலையில் “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் ரீமேக்கில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆம்!
1983 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான திரைப்படம் “அந்தா காணுன்”. இத்திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். ஹேமா மாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அமிதாப் பச்சான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் மாபெரும் வெற்றிபெற்றது.
அதே போல் 1982 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் “மாட்டுவின் சட்டங்களே”. இத்திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படத்தின் மலையாள ரீமேக் ஆகும். இதில் கமல்ஹாசன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் ரவிக்குமார், சீமா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இது தவிர “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரகேசரே இயக்கியிருந்தார். இதில் சங்கர் நாக், ஆரத்தி ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த படமே வேண்டாம்… சிவாஜி சொன்ன வார்த்தையால் ஏவிஎம் எடுத்த அதிரடி முடிவு… என்னவா இருக்கும்!