கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒரு அருமையான படம் பூந்தோட்ட காவல்காரன். படத்துக்குப் புது இயக்குனர் செந்தில்நாதன். படம் தயார். ஆனால் புது இயக்குனர் என்பதால் விநியோகஸ்தர் யாரும் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அன்று திருச்சி விநியோகஸ்தராக இருந்தவர் அடைக்கலராஜ் எம்பி. அவர் மட்டுமே ராவுத்தரிடம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.
படத்தின் முதல் காப்பி ரீரெக்கார்டிங்குக்காக இளையராஜாவிடம் போகிறது. படத்தை அவரோடு சேர்ந்து இயக்குனர் கோகுலகிருஷ்ணாவும் பார்த்துள்ளார். படம் சோலி முடிஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. கோகுலகிருஷ்ணாவோ சும்மா இருக்காமல் அடைக்கலராஜூக்குப் போன் போட்டு படம் சரியில்லன்னு சொல்லிவிட்டார்.
அவரும் ராவுத்தரிடம் கொடுத்த அட்வான்ஸைத் திருப்பி வாங்கிவிட்டார். விஜயகாந்துக்கோ கடும் கோபம். அவர் இளையராஜாவிடம் ஏன் கண்ட ஆள்களை எல்லாம் வச்சிக்கிட்டுப் படம் பார்க்கிறீங்கன்னு கேட்டுள்ளார். அப்புறம் ரீரெக்கார்டிங்கும் வேண்டாம்னு படத்தை ஓரம்கட்டுறாங்க.

செந்தில்நாதனும் மனம் உடைந்து விஜயகாந்தை சந்திக்காமலே வீட்டிலேயே இருந்துவிட்டார். திரும்பவும் அவர் தன் குருநாதர் எஸ்ஏசியிடம் போய் அசிஸ்டண்டாக சேர்ந்து விட்டார்.
இளையராஜா இதை எல்லாம் அறிந்து கொண்டார். பின்னர் ஒருநாள் ராவுத்தரிடம் பிரிண்டைக் கொண்டு வரச் சொல்கிறார். அப்போது படம் இளையராஜாவின் இன்னிசையோடு தயாரானது. படம் பட்டையைக் கிளப்புகிறது. செந்தில் நாதன் மட்டும் விநியோகஸ்தர் ஷோவைப் பார்க்கிறார். விஜயகாந்த், ராவுத்தர் ஆப்சண்ட். ஆனாலும் அடைக்கலராஜ் ஆள்களும் பார்க்கிறார்கள்.
செந்தில்நாதனை அழைத்துப் பாராட்டுகிறார்கள். செம படம்யான்னு சொல்றாங்க. அதுக்குப் பிறகு ராவுத்தர், விஜயகாந்த் இருவரும் நம்பவே இல்லை. அப்புறம் அவர்களுக்கும் போட்டுக் காட்டுறாங்க. விஜயகாந்த் செந்தில்நாதனை அழைத்துப் பாராட்டி அவருக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்து மனைவியுடன் தமிழ்நாடு முழுக்கப் போய் படத்தை மக்கள் ரசிக்கிறதைப் பாருங்கன்னு சொல்கிறார்.
செலவுக்கான பணத்தையும் கொடுக்கிறார். படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இசையும், பாடல்களும்தான். ஒரு படத்தை வெற்றிக்குக் கொண்டு போகணும்னா அதுக்கு முக்கிய காரணம் இசை தான். ராமராஜன், ஆர்.சுந்தரராஜன், மோகன், ராஜ்கிரண் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றன என்றால் அதுக்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் இசைதான்.